QuotePM Modi jointly inaugurate The ET Asian Business Leaders’ Conclave 2016 with Malaysian PM, Najib Razak
QuoteUnder the leadership of Prime Minister Najib, Malaysia is moving towards its goal of achieving developed country status by 2020: PM
QuoteClose relations with Malaysia are integral to the success of our Act East Policy: PM
QuoteThe 21st Century is the Century of Asia: PM
QuoteIndia is currently witnessing an economic transformation: PM
QuoteWe have now become the 6th largest manufacturing country in the world: PM
QuoteWe are now moving towards a digital and cashless economy: PM
QuoteIndia is currently buzzing with entrepreneurial activity like never before: PM
QuoteOur economic process is being geared towards activities which are vital for generating employment or self-employment opportunities: PM
QuoteIndia is not only a good destination. It’s always a good decision to be in India: PM

மாண்புமிகு மலேசிய பிரதமர் மரியாதைக்குரிய தத்தோ ஸ்ரீ முகம்மத் நஜீப் அவர்களே,

எகானாமிக் டைம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களே,

வர்த்தகத் துறை தலைவர்களே,

சகோதர, சகோதரிகளே,

மரியாதைக்குரிய மலேசிய பிரதமர் அவர்களுடன் இணைந்து 2016ஆம் ஆண்டின் தி எகானாமிக் டைம்ஸ் ஆசிய வர்த்தகத் தலைவர்களின் கூட்டத்தை துவக்கி வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தக் கூட்டத்திற்கு கோலாலம்பூர் நகரத்தை எகானாமிக் டைம்ஸ் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே ஒரு வணிகரீதியான, வர்த்தக ரீதியான  இடமாக மலேசியாவின் முக்கியத்துவத்தை நிரூபிப்பதாக அமைகிறது.

இந்தக் கூட்டம் மகத்தான வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!

 

நண்பர்களே,

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களின் தலைமையின் கீழ் 2020ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற அந்தஸ்தை பெறுவது என்ற அதன் இலக்கை நோக்கி மலேசியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதிலும் தற்போது நிலவிவருகின்ற பொருளாதார நிலைமைகளுக்கு இயைந்த வகையில் செயல்படுத்துவதற்கான திறனையும் அது வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இங்கு வந்திருப்பது இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே காலத்தைக் கடந்து நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது.

கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் இருக்கும் தோரண வாயில் நமது வரலாற்றுபூர்வமான உறவுகளுக்கான சமீபத்திய அறிகுறியாக, நம் இரண்டு நாடுகளையும் நம் இரண்டு மகத்தான கலாச்சாரங்களையும் இணைப்பதாக அமைகிறது.

சமீப காலத்தில் யுத்த தந்திர ரீதியான கூட்டணியையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

கடந்த ஆண்டு நவம்பரில் நான் மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணம் இந்த யுத்த தந்திர ரீதியான செயல்பாட்டை பல்வேறு துறைகளிலும் வலுப்படுத்த உதவியது.

மலேசியாவுடன் நெருக்கமான உறவுகள் என்பது எங்களின் கிழக்கை நோக்கி செயல்படுவது என்ற கொள்கையின் வெற்றியோடு பின்னிப் பிணைந்ததாகும்.

திட்ட வளர்ச்சி நிதி மற்றும் கடனுக்கான ஏற்பாடு ஆகியவை உள்ளிட்ட இந்தியாவின் முன்முயற்சிகள் இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்பிற்கும் இடையேயான ஒத்துழைப்பிற்கு பெரும் உந்துதலைக் கொடுத்துள்ளது.

 

நண்பர்களே,

இந்தப் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையே சிறப்பான ஒருங்கிணைப்பிற்கான முயற்சிகள் ஆசியன் அமைப்பு நாடுகளின் தலைவர்களின் தலைமையில்தான் நடைபெற்று வருகின்றன.

எனவே ஆசியாவின் வர்த்தகத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டுவருவதென்ற இந்த முன்முயற்சி மிகவும் சரியான நேரத்தில்தான் நடைபெறுகிறது.

21ஆம் நூற்றாண்டு என்பது ஆசியாவிற்கான நூற்றாண்டு என பல சந்தர்ப்பங்களில் நான் கூறி வந்திருக்கிறேன்.

வேலை செய்வதற்கான கைகள், நுகர்வுப் பொருட்களுக்கான குடும்பங்கள், கற்பதற்கான எளிமை நிரம்பிய தலைகள் ஆகியவை ஆசியாவில்தான் உள்ளன.

உலகளாவிய பொருளாதாரச் சூழ்நிலையானது நிச்சயமற்றதாக, சாதகமானதாக இல்லாமல் இருந்தபோதிலும், ஆசிய பகுதியின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள்தான் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றுகளாக இருக்கின்றன.

 

நண்பர்களே,

இந்தியா இப்போது பொருளாதார ரீதியான மாற்றத்தை சந்தித்து வருகிறது.

இப்போது அது உலகத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மிகப் பெரும் பொருளாதாரம் மட்டுமல்ல; கீழ்கண்டவற்றை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கும் அடையாளமாகவும் அது திகழ்கிறது:

  • வர்த்தகம் செய்வதற்கான மிக எளிதான சூழ்நிலை
  • நிர்வாகத்தை வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும் மாற்றியுள்ள நிலை
  • அதிகச் சுமையுள்ள கட்டுப்பாடுகளைக் குறைப்பது.

தற்போது, பொருளாதார அமைப்பினை கருப்புப்பணத்திலிருந்தும், ஊழலிலிருந்தும் சுத்தப்படுத்துவது என்பது எனது திட்டத்தில் முதன்மையானதாக உள்ளது.

மின்னணுமயமாக்கல், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அறிமுகப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களது முயற்சிகளின் விளைவை பல்வேறு அறிகுறிகள் குறித்த இந்தியாவின் உலக அளவிலான தர நிலையிலிருந்தே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

உலக வங்கியின் வர்த்தகம் செய்வது குறித்த அறிக்கையிலும் கூட இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது.

உலகத்தின் மிகச் சிறந்த வர்த்தக செயல்பாடுகளுக்கும் இந்தியாவிலுள்ள வர்த்தகச் செயல்பாடுகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியையும் நாங்கள் மிக வேகமாக குறைத்துக் கொண்டு வருகிறோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு (அன்க்டாட்) வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டு அறிக்கையில் 2016-18 காலப்பகுதிக்கான உயர்மட்டத்திலுள்ள பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நாங்கள் இப்போது மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளோம்.

உலகப் பொருளாதார அமைப்பின் 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளுக்கான உலகளாவிய போட்டிபோடும் திறனுக்கான அறிக்கையில் எங்கள் நிலை 32 இடங்களைத் தாண்டி உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் நாங்கள் 16 இடங்களைத் தாண்டி முன்னேறியிருக்கிறோம்.  அதைப் போன்றே உலக வங்கியின் வசதிகள் குறித்த செயல்பாட்டுக்கான 2016ஆம் ஆண்டிற்கான அட்டவணையிலும் 19 இடங்களைத் தாண்டி முன்னேறியுள்ளோம்.

நேரடி அந்நிய முதலீட்டிற்காக புதிய துறைகளையும் நாங்கள் திறந்து வைத்துள்ளோம். தற்போதுள்ள துறைகளிலும் உயர்மட்ட அளவுகளை உயர்த்தியுள்ளோம்.

பெருமளவிலான நேரடி அந்நிய முதலீடுகளுக்கான கொள்கைகளில் சீர்திருத்தங்கள் எங்களது தீவிரமான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் முதலீட்டிற்கான நிபந்தனைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவுகளைத்தான் நீங்கள் அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டிற்கு வந்து சேர்ந்த ஒட்டுமொத்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கடந்த ஆண்டில்தான் இருப்பதிலேயே மிக அதிகமான நேரடி அந்நிய முதலீடு நாட்டிற்குள் வந்துள்ளது.

அதற்கு முந்தைய இரண்டு நிதியாண்டுகளை ஒப்பிடும்போது கடந்த இரண்டு நிதியாண்டுகளில் நாட்டிற்குள் வந்த பங்குகளுக்கான நேரடி அந்நிய முதலீடு என்பது 52 சதவீதம் ஆகும்.

நேரடி அந்நிய முதலீடு வருவதற்கான ஆதாரங்கள், அது வந்து சேரும் துறைகள் ஆகியவற்றிலும் பெருமளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாவது ஆண்டுவிழாவை கொண்டாட இருக்கின்ற எமது இந்தியாவில் உற்பத்தி செய் என்ற முன்முயற்சியானது உற்பத்தி, வடிவமைப்பு, கண்டுபிடிப்பு ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

எமது சாதனைகளில் ஒரு சிலவற்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்:

நாங்கள் இப்போது உற்பத்தியில் உலகத்திலேயே ஆறாவது பெரிய நாடாக மாறியிருக்கிறோம்.

உற்பத்தித் துறையில் ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பு என்பது 2015-16ஆம் ஆண்டில் 9.3 சதவீதம்  வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த  இரண்டு ஆண்டுகளில் 51 குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குத் திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன; 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆறு மிகப்பெரும் உணவுப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

19 புதிய நெசவுப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ஏற்கனவே உள்ள நெசவுப் பூங்காக்களில் புதிதாக 200 உற்பத்தி நிலையங்கள் செயல்படத் துவங்கியுள்ளன.

இந்த ஆண்டில் இந்தியாவில் கைபேசிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்துள்ளது.

வாகனத் தொழிலில் உலக அளவில் முன்னணி நிறுவனங்கள் புதிய உற்பத்தி மையங்களையும் சுற்றுச் சூழலுக்கு உகந்த உற்பத்தி நிலையங்களையும் நிறுவியுள்ளன.

 

நண்பர்களே,

இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக ஆக்குவதை உறுதிப்படுத்துவதற்கான எங்களது முயற்சிகள் சட்ட ரீதியான, கட்டமைப்பு ரீதியான வகையில் முழுமையானதாகவும், விரிவானதாகவும் அமைந்துள்ளன.

கீழ்கண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்:

சரக்கு மற்றும் சேவை வரிக்கான அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு முறையிலான, பண பரிமாற்றமில்லாத பொருளாதாரத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகிறோம்.

எமது அனுமதி வழங்கும் அமைப்பு பெருமளவிற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகம் செய்ய பதிவு செய்வது, ஏற்றுமதி-இறக்குமதிக்கான அனுமதிகள், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் படுத்துவது போன்றவற்றிற்கென ஒற்றைச் சாளர தொடர்பு ஏற்பாடுகளையும் நாங்கள் துவக்கியுள்ளோம்.

தண்ணீர், மின்சாரம் போன்ற பயன்பாட்டு விஷயங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளும் இப்போது எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் முதலீட்டாளர்களுக்கான வசதிகளை செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய் என்ற திட்டத்தை துவக்கியபிறகு மாநில அரசுகளுடனான எங்கள் பங்கேற்பு பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி அவர்களின் வர்த்தகம் குறித்த கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இது 2016ஆம் ஆண்டிலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக, அறிவுசார் சொத்துரிமைக்கான செயல்முறைத் திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கென முழுமையானதொரு தேசிய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கொள்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

ஆக்கபூர்வமான அழிப்பு என்ற செயல்முறையைத் துவக்குவதற்கான முக்கிய நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

நிறுவனங்கள் மிக எளிதாக தங்களை மறுசீரமைத்துக் கொள்வது; வெளியேறுவது ஆகியவற்றையும் நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.

நொடித்துப் போவது, திவாலாவது ஆகியவற்றுக்கான வரைமுறை குறித்த சட்டமியற்றி அதை அமல்படுத்தியது இந்தியாவில் மிக எளிதாக வெளியேறுவதை நோக்கிய முக்கியமானதொரு நடவடிக்கையாக அமைகிறது.

வர்த்தக ரீதியான சச்சரவுகளை விரைந்து தீர்ப்பதற்கென புதிய வர்த்தக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நடுவர் மன்றச் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கென நடுவர் மன்றம் குறித்த சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் தொழில்முனைவு நடவடிக்கைகளில் இந்தியா இப்போது வேகமாக செயல்பட்டு வருகிறது.

புதிய தொழில்களைத் துவங்குவதென்பது இந்தியாவில் அடுத்த மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது. இது புரட்சிக்கு சற்றும் குறைவானதல்ல.

இந்தியாவில் புதிய தொழில்களைத் துவங்குவது என்ற திட்டம் இந்தத் துறையில் எங்களது திறனை கட்டவிழ்த்து விடுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

எங்களது பொருளாதார ரீதியான செயல்பாடுகள் வேலைவாய்ப்பை உருவாக்குவது அல்லது சுய வேலைவாய்ப்புகளுக்கு மிகவும் அவசியமான நடவடிக்கைகளை நோக்கியே செயல்பட்டு வருகின்றன.

இதன் பயனை மக்கள் அனைவரும் பங்கு பெறுவதற்கு இதுவே ஒரே வழியாகும்.

திறன்படைத்த இந்தியா என்ற முன்முயற்சியின் மூலமும் அதன் பல்வேறு உள் அமைப்புகளின் மூலமும் சந்தையின் தேவைகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

நவீன வசதிகளுடன் கூடிய கட்டமைப்பை உருவாக்குவதுதான் தற்போது எங்கள் முன்னேயுள்ள மிகப்பெரும் கடமையாகும்.

நாடு முழுவதிலும் தொழிற்சாலைகளுக்கான தனிப்பாதைகளை உள்ளடக்கிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

நாடுமுழுவதிலும் வசதிக் குறைபாடுகளை அகற்றுவதற்கும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

நாடுமுழுவதிலும் சாலைகள், ரயில்பாதைகள், துறைமுகங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கட்டமைப்பிற்கான நிதியுதவி செய்ய வெளிநாட்டு நிதி அமைப்புகளுடன் இணைந்து தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பிற்கான நிதியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

 

நண்பர்களே,

ஒருங்கிணைப்பிற்கான நேரம் இதுவேயாகும்.

வெளிப்படைத்தன்மையில்லாமல்  ஒருங்கிணைப்பு என்பது நடைபெறாது.

இந்தியாவின் இதயம் எப்போதுமே வெளிப்படையானதாகவே இருந்து வந்துள்ளது.

இப்போது, பொருளாதார அளவிலும் கூட ஒருங்கிணைந்த பொருளாதாரங்களிலேயே மிகவும் வெளிப்படையான நாடுகளில் ஒன்றாகவே நாங்கள் இருக்கிறோம்.

இதுவரையில் இந்தியாவிற்கு வராதவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

உங்களுக்கு உதவி தேவைப்படும்போது நான் அங்கே இருப்பேன் என்று தனிப்பட்ட முறையில் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

முதலீடு செய்வதற்கான இடம் மட்டுமல்ல இந்தியா.

இந்தியாவில் இருப்பது என்பது எப்போதுமே மிகச் சிறந்த முடிவும் ஆகும்.

அனைவருக்கும் நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy

Media Coverage

India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 20 பிப்ரவரி 2025
February 20, 2025

Citizens Appreciate PM Modi's Effort to Foster Innovation and Economic Opportunity Nationwide