இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“நன்றி பிரதமர் அவர்களே, ஆஸ்திரேலிய தினத்தையொட்டி உங்களுக்கும் நட்பு நிறைந்த ஆஸ்திரேலிய மக்களுக்கும் வாழ்த்துக்கள்”.
Thank you Prime Minister @AlboMP. Greetings to you and to the friendly people of Australia on Australia Day. https://t.co/48wUWuFxwV
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
நேபாள பிரதமர் ட்விட்டருக்கு பிரதமர் பதிலளித்துள்ளதாவது;
“பிரச்சண்டா அவர்களே, உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி”.
Thank You @cmprachanda ji for your warm wishes! @PM_nepal_ https://t.co/6PlkrLsLru
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
பூடான் பிரதமரின் வாழ்த்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் வருமாறு;
“டாக்டர் லோட்டே ஷெரிங் அவர்களே, உங்களது வாழ்த்துக்கு நன்றி. இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பூடானின் தனித்துவம் வாய்ந்த ஒத்துழைப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது”.
Thank you @PMBhutan Dr. Lotay Tshering for your warm wishes! India is committed to its unique partnership with Bhutan for progress and prosperity of both our nations. https://t.co/eFbhhLGWNX
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
மாலத்தீவுகள் அதிபரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“அதிபர் இபு சோலிஹ் அவர்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்தியா – மாலத்தீவுகளின் கூட்டாண்மை அடைந்துள்ள நிலைத்த முன்னேற்றத்தைக் காணுவதில் மகிழ்ச்சி”.
Thank you for your warm greetings, President @ibusolih. Glad to see the sustained progress achieved by India-Maldives partnership, underpinned by common democratic values. https://t.co/oiTJMaV1Z2
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
இஸ்ரேல் பிரதமரின் ட்விட்டருக்கு பிரதமர் அளித்துள்ள பதில்;
பிரதமர் நேத்தன்யாஹூ அவர்களே, இந்தியாவின் குடியரசு தினத்துக்கு உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளேன்”.
Thank you for your warm wishes for India's Republic Day, PM @netanyahu. Look forward to further strengthening our strategic partnership. https://t.co/SvHPMJxBVx
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
பிரான்ஸ் அதிபரின் ட்விட்டருக்கு பிரதமரின் பதில் வருமாறு;
“எனதருமை நண்பர் இமானுவேல் மேக்ரோன் அவர்களின் இந்திய குடியரசு நாள் வாழ்த்துக்கு நன்றி. இந்தியாவின் ஜி.20 தலைமைத்துவம், இந்தியா – பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பின் 25 ஆண்டு நிறைவு ஆகியவற்றின் வெற்றிக்கு இணைந்து பாடுபடுவோம் என்ற உங்களது அர்ப்பணிப்பை நான் பகிர்ந்து கொள்கிறேன். உலக நன்மைக்காக இந்தியாவும், பிரான்சும் ஆற்றலுடன் இணைந்து செயல்படும்”.
Grateful for your warm greetings my dear friend @EmmanuelMacron on India’s Republic Day. I share your commitment to work together for success of India’s G20 Presidency & 25th anniversary of India-France Strategic Partnership. India and France together are a force for global good. https://t.co/BgCavJ97tF
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
மொரீஷியஸ் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளதாவது;
“நன்றி பிரதமர் குமார் ஜூகுநாத் அவர்களே. நவீன குடியரசுகளின் பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ள நமது இரு நாடுகளும் மக்கள் சார்ந்த வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
மொரீஷியசுடன் கூட்டுறவை மேலும் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை எதிர்நோக்கியுள்ளேன்”
Thank you, PM @KumarJugnauth. In our shared journey as modern Republics, our two countries have been partnering closely in people-centred development.
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
Looking forward to taking our cherished partnership with Mauritius to even greater heights. https://t.co/WX19xEGMAN