ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது நன்றிகளைத் தெரிவித்துகொண்டுள்ளார். பழம்பெரும் பாடகியான லதா பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தனது குஜராத்தி மொழி பஜன் ஒன்றையும் தனது ட்விட்டர் செய்தியில் இணைத்திருந்தார்.
தமது பதில் ட்வீட்டில் பிரதமர்:
தங்களது வாழ்த்துக்களுக்கு மிகுந்த நன்றிகள் சகோதரி @mangeshkarlata அவர்களே. உங்களுக்கும் மிக்க உவகையான ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள். உங்கள் இசைக்கோர்ப்பில் நீங்கள் அனுப்பிய பஜன் மனதை மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
आशीर्वचन के लिए बहुत-बहुत आभार @mangeshkarlata दीदी। आपको भी जन्माष्टमी की अनेकानेक शुभकामनाएं। आपके सुरों से सजा यह भजन मंत्रमुग्ध कर देने वाला है। https://t.co/jzxQq6OXQr
— Narendra Modi (@narendramodi) August 30, 2021