அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்கு நன்றி. இது இந்தோ-பசிஃபிக் நாடுகளை உள்ளடக்கிய தடையற்ற வர்த்தகத்தை உறுதிசெய்யும் நமது முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
நான் எனது பயணத்தையும், உறுப்பு நாடுகளுடனான குவாட் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்த விவாதங்களை அடுத்தக் கட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான முயற்சிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."
Thank you @AlboMP for hosting the next Quad Summit in Sydney which will bolster our efforts to ensure a free, open and inclusive Indo-Pacific.
— Narendra Modi (@narendramodi) April 26, 2023
I look forward to my visit and discussions on strengthening Quad collaboration across domains to advance our positive agenda. https://t.co/WtCT0TYQfR