

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நெதன்யாகு, அவரது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இரு தலைவர்களும் மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தனர்.
பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும், அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். தற்போதைய மோதலுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அடிப்படையில், விரைவில் அமைதித் தீர்வு காண வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இருதலைவர்களும், பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் இந்தியா-இஸ்ரேல் இடையேயான ராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர்.
தொடர்ந்து தொடர்பில் இருப்பதெனவும் இருதலைவர்களும் ஒப்புகொண்டனர்.