கிரீஸ் பிரதமர் திரு. கைரியாகோஸ் மிட்சோடகிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு பிரதமர் மிட்சோடாகிஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்கள் மூலம் இருதரப்பு உறவுகளில் உருவாகியுள்ள உத்வேகத்திற்கு இரு தலைவர்களும் பாராட்டு தெரிவித்ததுடன், இந்தியா-கிரீஸ் இடையேயான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களது உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மிட்சோடாகிஸ் இந்தியாவுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஐஎம்இசி மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
Yesterday, had a productive conversation with PM @kmitsotakis, reaffirming our shared commitment to strengthening the India-Greece Strategic Partnership. Together, we aim to deepen our collaboration across trade, defence, shipping and connectivity. Greece is a valued partner for…
— Narendra Modi (@narendramodi) November 2, 2024