சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்-உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
2023 செப்டம்பர் மாதத்தில் பட்டத்து இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். எதிர்காலத்திற்கான இருதரப்பு கூட்டாண்மை செயல்பாடு குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
எக்ஸ்போ 2030, ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2034 ஆகியவற்றை நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுதி அரேபியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டனர்.
Held a good conversation with my Brother HRH Prince Mohammed bin Salman bin Abdulaziz Al Saud on the future of Strategic Partnership between India and Saudi Arabia. We exchanged views on the West Asia situation and shared concerns regarding terrorism, violence and the loss of…
— Narendra Modi (@narendramodi) December 26, 2023