கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனியின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
கத்தாரில் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு திரு மோடி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
"கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு @TamimBinHamad உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் கத்தாரில் வெற்றிகரமான @FIFAWorldCupக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். 2023—ஆம் ஆண்டில் இந்தியா-கத்தார் ராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் ஒன்றாக இணைந்து கொண்டாட நாங்கள் ஒப்புக்கொண்டோம்." என்று தெரிவித்திருந்தார்.
Was happy to speak with HH Amir @TamimBinHamad of Qatar. Thanked him for his gracious Diwali greetings, and conveyed best wishes for a successful @FIFAWorldCup in Qatar. We agreed to jointly celebrate 50 yrs of India-Qatar diplomatic relations in 2023.
— Narendra Modi (@narendramodi) October 29, 2022