இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த பிரதமர், இந்தக் கடினமான தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் இந்தியா வன்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது உறுதிபட தெரிவித்தார்.
இஸ்ரேலில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். அதற்குப் பிரதமர் நேதன்யாகு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பதாக உறுதியளித்தார்.
இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.