பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை குறித்த விரிவான காணொலிக் காட்சிகளை இன்று பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதுகெலும்புக்கு நன்மை அளிப்பதுடன், மாதவிடாயின்போது ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது என்பதால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பகிரப்பட்ட இந்தக் காணொலியில், ஆசனத்தின் வழிமுறைகள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பாதஹஸ்தாசனம், பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதை பயிற்சி செய்யுங்கள்.”
Padahastasana has several benefits…do practice it. pic.twitter.com/MdWEBWgObg
— Narendra Modi (@narendramodi) June 16, 2024
पादहस्तासन का नियमित अभ्यास कई तरह से फायदेमंद है… pic.twitter.com/gVhT4DW5q9
— Narendra Modi (@narendramodi) June 16, 2024