திரிகோணாசனம் அல்லது முக்கோண வடிவத்தைக் குறிக்கும் ஆசனம் குறித்த காணொலிப் பதிவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.06.2024) சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். உடலின் மேல் பகுதியை வலுப்படுத்தவும், சிந்தனையை ஒருமுகப்படுத்தவும், மக்கள் இந்த ஆசனப் பயிற்சியை செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
10-வது சர்வதேச யோகா தினம் அடுத்த சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில், பிரதமரால் பகிரப்பட்டுள்ள இந்தப் பகிர்வு திரிகோணாசனத்தின் நிலையையும், அந்த ஆசனத்தைச் செய்வதற்கான படிநிலைகளையும் விரிவாகக் கூறுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"வலுவான தோள்கள் மற்றும் முதுகைப் பெறவும் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் திரிகோணாசனப் பயிற்சி செய்யுங்கள்!"
Practice Trikonasana for improved shoulders, back and improving concentration! pic.twitter.com/8UJlcQZJh1
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
त्रिकोणासन का अभ्यास जहां पीठ और कंधे को मजबूती देता है, वहीं एकाग्रता बढ़ाने में भी यह काफी मददगार है। pic.twitter.com/gEQxvKj7l3
— Narendra Modi (@narendramodi) June 14, 2024