ராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி நிகழ்ச்சியை முன்னிட்டு மைதிலி தாக்கூர் பாடிய பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
அயோத்தியில் பிரதிஷ்டை கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான பல்வேறு சூழல்களை அனைவருக்கும் நினைவூட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
"அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவூட்டுகிறது. அத்தகைய ஒரு உணர்வுபூர்வமான அத்தியாயம் சபரியுடன் தொடர்புடையது. மைதிலி தாகூர் அவர்கள் தனது இனிமையான ராகங்களில் இதை எவ்வாறு நெய்திருக்கிறார் என்பதைக் கேளுங்கள். #ShriRamBhajan "
अयोध्या में प्राण-प्रतिष्ठा का अवसर देशभर के मेरे परिवारजनों को प्रभु श्री राम के जीवन और आदर्शों से जुड़े एक-एक प्रसंग का स्मरण करा रहा है। ऐसा ही एक भावुक प्रसंग शबरी से जुड़ा है। सुनिए, मैथिली ठाकुर जी ने किस तरह से इसे अपने सुमधुर सुरों में पिरोया है।
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
#ShriRamBhajan…