பைசாரன், அரு, கோகர்நாக், அச்பால், குல்மார்க், ஸ்ரீநகர் மற்றும் தால் ஏரியின் அழகைக் குறிப்பிட்டு ஜம்மு காஷ்மீரின் அழகு மற்றும் விருந்தோம்பல் குறித்த நாட்டு மக்களின் கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
திரு ரஞ்சித் குமார் என்பவரது ட்விட்டர் பதிவிற்கு, கடந்த 2019- ஆம் ஆண்டு தமது ஸ்ரீநகர் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“அபாரம். 2019- ஆம் ஆண்டு எனது ஸ்ரீநகர் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்”, என்று ட்விட்டர் பதிவில் பிரதமர் பதிலளித்துள்ளார்.
Excellent. I’m also tempted to share a picture from my visit to Srinagar in 2019. https://t.co/UYKde98S68 pic.twitter.com/ZfDyghtEdj
— Narendra Modi (@narendramodi) October 8, 2022