நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்பது பற்றிய பார்வையை நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் கட்டுரையாக பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“நமது சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான நிகழ்வாக சுதந்திரத்தின் 70-வது ஆண்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு நாம் நடத்துகிறோம். நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் உள்ள இந்தக் கட்டுரை நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்ற பார்வையை வழங்குகிறது.
#கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"
இந்தியாவின் புகழ்மிக்க கலாச்சார பாதுகாப்புக்கு அரசின் பணியை எடுத்துரைக்கும் மைகவ் ட்விட்டர் பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“நமது புகழ்மிக்க கலாச்சாரத்தில் நாம் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். அதன் பாதுகாப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் பணிசெய்யும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு நாம் பெருமை கொள்கிறோம். #கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"
This year we mark Azadi Ka Amrit Mahotsav, an occasion to pay tributes to our freedom fighters. This article on the NaMo App’s Vikas Yatra section gives you a glimpse of how India is remembering the greats who built our nation. #8YearsOfPreservingCulture https://t.co/w10LmzcDpH
— Narendra Modi (@narendramodi) June 2, 2022
We take great pride in our glorious culture and we are humbled to have got the opportunity to work for it’s preservation as well as celebration. #8YearsOfPreservingCulture https://t.co/20tvS2MzIz
— Narendra Modi (@narendramodi) June 2, 2022