ஷஷாங்காசனா செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவும். இந்த ஷஷாங்காசனா (முயல் நிலை) குறித்த காணொலிப் பதிவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்த ஆசனம் முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இந்த ஆசனம் செய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சர்வதேச யோகா தினத்தின் 10-வது பதிப்பிற்கு முன்னதாக பகிரப்பட்ட இந்தப் பதிவு ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டிலும்.இந்த ஆசனத்தைச் செய்வதற்கான படிகளையும் விரிவாகக் கூறுகிறது.
இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஷஷாங்காசனாவை நீங்கள் இவ்வாறு முறைப்படி தவறாமல் செய்ய வேண்டும்..."
Here is why you must practice Shashankasana regularly… pic.twitter.com/95kwzrKYTD
— Narendra Modi (@narendramodi) June 19, 2024
शशांकासन का नियमित अभ्यास क्यों करना चाहिए, आइए जानते हैं… pic.twitter.com/9ibVIIW5wC
— Narendra Modi (@narendramodi) June 19, 2024