மேற்கு வங்க எய்ம்ஸை மேற்கோள் காட்டி, மத்திய இணை அமைச்சர் திரு.நிசித் பிரமானிக் வெளியிட்ட ட்விட்டர் பதிவை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு இந்தியா முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இந்தியா முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் நன்மைகளுக்கு மேற்கு வங்க எய்ம்ஸ் ஒரு உதாரணமாகும். எங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, உள்ளூர் மொழிகளில் மருத்துவம் படிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இது மக்களுக்கு உதவியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Citing the example of West Bengal, this thread highlights the benefits that come with more AIIMS across India.
— Narendra Modi (@narendramodi) April 8, 2023
On a connected note, our Government is expanding the number of medical colleges and also ensuring medicine can be studied in local languages. This is helping people. https://t.co/M3SeT9AjD5