சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பெண்கள் சக்திக்கு வணக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“மகளிர் தினத்தையொட்டி பெண்களின் ஆற்றல் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களது சாதனைகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் மகளிரை அதிகாரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம் அவர்களுக்கு கண்ணியத்துடன் கூடிய வாய்ப்பையும் வழங்கி வருகிறது.”
“நிதி ஆதரவிலிருந்து சமூக பாதுகாப்பு வரை, தரமான மருத்துவ சிகிச்சையிலிருந்து வீட்டுவசதி வரை, கல்வியில் இருந்து தொழில்முனைவு வரை மகளிர் சக்தியை இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் முன்னணியில் கொண்டுவர ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் வரும் காலங்களில் பெரும் வேகத்துடன் தொடரும்.”
“இன்று மாலை 6 மணியளவில் கட்ச்-ல் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் நான் உரையாற்ற இருக்கிறேன். நமது சமூகத்தில் பெண் துறவிகளின் பங்களிப்பு குறித்து அதில் விளக்கப்படும்.
கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும். https://t.co/ImLHzdJpEQ"
On Women’s Day, I salute our Nari Shakti and their accomplishments in diverse fields. The Government of India will keep focusing on women empowerment through its various schemes with an emphasis on dignity as well as opportunity.
— Narendra Modi (@narendramodi) March 8, 2022