பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வெனுடன், 2021 மார்ச் 5 ஆம் தேதி அன்று மெய்நிகர் கூட்டம் நடத்துகிறார்.
இது, கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இரு தலைவர்கள் இடையே நடைபெறும் 5 வது பேச்சுவார்த்தையாகும்.
முதல் இந்தியா நார்டிக் உச்சிமாநாட்டுக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டாக்ஹோம் சென்றிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு மேக் இன் இந்தியா வார நிகழ்ச்சியில் பங்கேற்க, ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இந்தியா வந்திருந்தார்.
இதற்கு முன்பு, இரு தலைவர்களும், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஐ.நா.பொது சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசினர்.
2020 ஏப்ரல் மாதம், இரு பிரதமர்களும், கொவிட்-19 தொற்று நிலவரம் குறித்து தொலைபேசியில் ஆலோசித்தனர்.
மேலும், ஸ்வீடன் மன்னர் 16 ஆம் கார்ல் மற்றும் ராணி சிலிவியா ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தனர்.
இந்தியாவும் சுவீடனும் ஜனநாயகம், சுதந்திரம், பன்மைத்துவம் மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நட்பு உறவைக் கொண்டுள்ளன.
இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, புதுமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளன.
சுமார் 250 ஸ்வீடன் நிறுவனங்கள், இந்தியாவில் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், வாகன தொழில், சுத்தமான தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை, கனரக இயந்திரங்கள், மற்றும் சாதனங்கள் என பல துறைகளில் தீவிரமாக செயல்படுகின்றன.
இதேபோல் சுமார் 75 இந்திய நிறுவனங்கள் ஸ்வீடனில் செயல்படுகின்றன.
இந்த கூட்டத்தின்போது, இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்துவார்கள்.
மேலும், கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வர்.
On #WorldWildlifeDay, I salute all those working towards wildlife protection. Be it lions, tigers and leopards, India is seeing a steady rise in the population of various animals. We should do everything possible to ensure protection of our forests and safe habitats for animals.
— Narendra Modi (@narendramodi) March 3, 2021