Quote“அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழா பயணத்தில் தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது முக்கியத்துவம் வாய்ந்த பரிணாமம்
Quote“இந்த இயக்கத்துடன் பொது மக்கள் பங்கேற்கும் போது அவர்களும் இந்தப்பணியின் தீவிரத்தன்மையை அறிந்துகொள்ள முடிகிறது”
Quote“தூய்மை பாரத இயக்கத்தில் மக்கள் இணையும் போது பொதுமக்களிடையேயும் உணர்வு வெளிப்படுகிறது”
Quote“நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டு வருகின்றன. 25,000 அமிர்தநீர்நிலைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன”
Quote“அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்காக மாநிலத்தில் நீர்வள இயக்கம் பெரிய வளர்ச்சி அளவீடாக உள்ளது”
Quote“ஒரு துளி அதிக பயிர்” என்ற இயக்கத்தின் கீழ் நாட்டில் 70 லட்சம் ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளது”
Quote“அடுத்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் விநியோகம் முதல் தூய்மைப் பணி மற்றும் கழிவு மேலாண்மையை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை காணும் செயல்திட்டத்தை கிராமப் பஞ்சாயத்துக்கள் தயாரிக்க வேண்டும்”
Quote“நமது ஆறுகள், நமது நீர்நிலைகள் ஆகியவை ஒட்டுமொத்த தண்ணீர் சுற்றுச்சூழல் முறையி
Quoteதண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தண்ணீர் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள அளப்பரிய பங்களிப்பு குறித்து பேசி, நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நமது அரசியலமைப்பில், தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது, நாட்டின் கூட்டு இலக்குகளை அடைய மாநில அரசுகளின் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகள் பெரிதும் உதவும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழாவின் பயணத்தின் முக்கியமான பரிமாணமாக தண்ணீர் தொலைநோக்கு @ 2047 உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

முழு அரசு' மற்றும் 'முழு நாடு' என்ற தனது தொலைநோக்கை  வலியுறுத்திய பிரதமர், நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில் அனைத்து மாநிலங்களும்  இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

அரசின் முயற்சியால் மட்டும் வெற்றி கிடைக்காது என்று குறிப்பிட்ட பிரதமர், பொது மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் பங்கு குறித்து தெரிவித்ததுடன், நீர் பாதுகாப்பு தொடர்பான இயக்கங்களில் அதிகளவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் பொறுப்புடைமையை குறைக்காது என்றும், அனைத்துப் பொறுப்புகளையும் மக்கள் மீது விதிப்பது அர்த்தமல்ல என்றும் பிரதமர் விளக்கினார். மேலும், இயக்கத்தில் ஈடுபடும் முயற்சிகள் மற்றும் செலவிடப்படும் பணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதே பொதுமக்களின் பங்கேற்பின் மிகப்பெரிய நன்மையாகும் என்று கூறினார். “பொதுமக்கள் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்படும் போது,  ​​அவர்கள் அந்தப்பணியின் தீவிரத்தன்மையையும் அறிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக, எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது இயக்கத்திற்கும் பொதுமக்களிடையே உரிமை என்ற உணர்வு ஏற்படுவதாக கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் உதாரணமாகக் கூறிய பிரதமர், “மக்கள் தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்த போது, ​​மக்களிடையே ஓர் உணர்வு ஏற்படுவதாகவும், இந்திய மக்களின் முயற்சிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார். அசுத்தங்களை களைவதற்கான ஆதாரங்களை சேகரிப்பது, பல்வேறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவது அல்லது கழிப்பறைகள் கட்டுவது என பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்ததாக கூறினார். ஆனால் அசுத்தம் எங்கேயும் இல்லை என்று மக்கள் முடிவு செய்தபோது இந்த இயக்கத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.  நீர் பாதுகாப்பில் பொது மக்களின் பங்கேற்பு குறித்த எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

“நீர் விழிப்புணர்வு விழாக்கள் அல்லது’ நீர் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவில்  நாம் ஏற்பாடு செய்ய முடியும் என்று பிரதமர் கருத்து தெரிவித்தார்.   பள்ளிகளில் பாடத்திட்டம் முதல் செயல்பாடுகள் வரை புதுமையான வழிகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதில் இதுவரை 25 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்களை இணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளைக் கண்டறிவதோடு, புவி உணர்வு மற்றும் புவி- வரைபடம் போன்ற தொழில்நுட்பங்களைக் குறிப்பிட்டார். கொள்கை அளவில் நீர் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ள அரசின் கொள்கைகள் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை வழங்குவதற்கான ஒரு மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி அளவுகோலாக நீர் வள இயக்கம் இருப்பதன்   வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், பல மாநிலங்கள் இந்த திசையில் முன்னேறி வரும் நிலையில் பல மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், எதிர்காலத்திலும் அதன் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். கிராமப் பஞ்சாயத்துகள் நீர்வள இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்றும், பணிகள் முடிந்த பிறகு, போதுமான மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைக்கப்பெற்றுள்ளதாக சான்றளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். "ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கிராமத்தில் குழாய் மூலம் தண்ணீர் பெறும் வீடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு மாதாந்திர அல்லது காலாண்டு அறிக்கையை இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்." மேலும், தண்ணீரின் தரத்தை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தண்ணீர் பரிசோதனை செய்யும் முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொழில்துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரு துறைகளிலும் உள்ள நீர் தேவைகளை குறிப்பிட்ட பிரதமர், நீர் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரங்களை நடத்த பரிந்துரைத்தார். பயிர் பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை வேளாண்மை போன்ற தொழில் நுட்பங்களின் உதாரணங்களை அவர் எடுத்துக்கூறினார்.

“ஒரு துளி அதிகப் பயிர்” என்ற இயக்கத்தின் கீழ் நாட்டில் 70 லட்சம் ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். நுண்ணீர் பாசனம் அனைத்து மாநிலங்களிலும்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேலும் அவர் கூறினார்.   அடல் நிலத்தடி நீர் பாதுகாப்புத்  திட்டத்தின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவதற்கு பெரிய அளவில் பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நீரூற்றுகளை புதுப்பிக்க, வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 நீர் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர்,  இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் கூறினார். உள்ளூர் அளவில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் விநியோகம் முதல் தூய்மைப் பணி மற்றும் கழிவு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளைக் காணும் செயல்திட்டத்தை கிராமப் பஞ்சாயத்துகள் தயாரிக்க வேண்டும். கிராமங்களில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான நிதியை பஞ்சாயத்து அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பணிகள் நடைபெறுவது குறித்த வழிவகைகளை  காண வேண்டும் என்றும் மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார். மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின் வெற்றி குறித்து குறிப்பிட்ட பிரதமர், அது போன்ற இயக்கங்கள் மாநில அரசுகளுக்கு அவசியம்  என்றும் அவை ஆண்டு தோறும் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  மழைக்காக காத்திருக்காமல், மழைக்கு முன்பாக திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

நீர் பாதுகாப்புத் துறையில் சுற்றுப்பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார் பிரதமர். இந்த நிதிநிலை அறிக்கையில்  சுற்றுப்பொருளாதாரம் குறித்து அரசுக்குப்  பொறுப்பு உள்ளதாகத் தெரிவித்தார். சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் பயன்படுத்தும் போதும்,  புதிய நீரை பாதுகாக்கும் போதும் ஒட்டுமொத்த  சுற்றுச்சூழல் முறையும் பயனடைவதாகக் கூறினார். ஆதலால் நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவை அவசியம் என்றும் குறிப்பிட்டார். பல்வேறு நோக்கங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட நீரை  பயன்படுத்துவதை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நமது ஆறுகள், நமது நீர்நிலைகள் ஆகியவை ஒட்டுமொத்த தண்ணீர் சுற்றுச்சூழல் முறையின் மிகவும் முக்கியமானப் பகுதியாகும்” என்று தெரிவித்த பிரதமர் அனைத்து மாநிலத்திலும் கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“தூய்மை கங்கை இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் ஆறுகளின் பாதுகாப்புக்காக அதே போன்ற இயக்கங்களை  தொடங்க முடியும்” என்றும் அவர் கூறினார்.  தண்ணீர் துறையில் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அனைத்து மாநில அரசுகளின் பொறுப்பு என்று  பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

தண்ணீர் குறித்து முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்கள் ஆண்டு மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் நீர்வள அமைச்சர்களும் பங்கேற்றனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • చెచర్ల ఉమాపతి January 30, 2023

    🙏🚩🌹🌹🛕🇮🇳🇮🇳🇮🇳🛕🌹🌹🚩👏
  • S Babu January 09, 2023

    🙏
  • CHANDRA KUMAR January 07, 2023

    Double Spirals Cone Economy (द्वि चक्रीय शंकु अर्थव्यवस्था) वर्तमान समय में भारतीय अर्थव्यवस्था को नई आकृति प्रदान करने की जरूरत है। अभी भारतीय अर्थव्यवस्था वृत्ताकार हो गया है, भारतीय किसान और मजदूर प्राथमिक वस्तु का उत्पादन करता है, जिसका कीमत बहुत कम मिलता है। फिर उसे विश्व से महंगी वस्तु खरीदना पड़ता है, जिसका कीमत अधिक होता है। इस चक्रीय अर्थव्यवस्था में प्राथमिक सस्ता उत्पाद विदेश जाता है और महंगा तृतीयक उत्पाद विदेश से भारत आता है। यह व्यापार घाटा को जन्म देता है। विदेशी मुद्रा को कमी पैदा करता है। अब थोड़ा अर्थव्यवस्था को आकृति बदलकर देखिए, क्योंकि अर्थव्यवस्था का आकृति बदलना आसान है। लेकिन भारत सरकार अर्थव्यवस्था का आकार बढ़ाने के प्रयास में लगा है, वह भी विदेशी निवेश से, यह दूरदर्शिता नहीं है। भारतीय अर्थव्यवस्था में दो तरह की मुद्रा का प्रचलन शुरू करना चाहिए, 80% मुद्रा डिजिटल करेंसी के रूप में और 20% मुद्रा वास्तविक मुद्रा के रूप में। 1. इसके लिए, भारत सरकार अपने कर्मचारियों को वेतन के रूप में 80% वेतन डिजिटल करेंसी में और 20% वेतन भारतीय रुपए में दिया जाए। 2. अनुदान तथा ऋण भी 80% डिजिटल करेंसी के रूप में और 20% भारतीय रुपए के रूप में दिया जाए। 3. इसका फायदा यह होगा कि भारतीय मुद्रा दो भागों में बंट जायेगा। 80% डिजिटल करेंसी से केवल भारत में निर्मित स्वदेशी सामान ही खरीदा और बेचा जा सकेगा। 4. इससे स्वदेशी वस्तुओं का उपभोग बढ़ेगा, व्यापार घाटा कम होगा। 5. महंगे विदेशी सामान को डिजिटल करेंसी से नहीं खरीदा जा सकेगा। 6. वर्तमान समय में सरकारी कर्मचारी अपने धन का 70 से 80% का उपयोग केवल विदेशी ब्रांडेड सामान खरीदने में खर्च होता है। इससे घरेलू अर्थव्यवस्था पर नकारात्मक प्रभाव पड़ता है और सरकार का अधिकतम धन विदेशी अर्थव्यवस्था को गति प्रदान करता है। इसीलिए भारत सरकार को चाहिए की जो वेतन सरकारी कर्मचारियों को दिया जा रहा है उसका उपयोग घरेलू अर्थव्यवस्था को गति देने में किया जाना चाहिए। 7. भारत के उद्योगपति और अत्यधिक संपन्न व्यक्ति अपने धन का उपयोग स्वदेशी वस्तुओं को खरीदने में करे। व्यर्थ का सम्मान पाने के लिए विदेशी ब्रांड पर पैसा खर्च न करे। इसके लिए भी, यह अनिवार्य कर दिया जाए कि यदि किसी व्यक्ति को 20% से अधिक का लाभ प्राप्त होता है तो उसके लाभ का धन दो भागों में बदल दिया जायेगा, 80% भाग डिजिटल करेंसी में और 20% भाग वास्तविक रुपए में। 8. वर्तमान समय में जब वैश्विक मंदी दस्तक देने वाला है, ऐसी समय में भारतीयों को ब्रांडेड वस्तुओं को तरफ आकर्षित होने के बजाय, घरेलू अर्थव्यवस्था को गति देने के लिए, स्वदेशी वस्तुओं का खरीद करना चाहिए। इससे रोजगार सृजन होगा। अब थोड़ा समझते हैं, द्वि चक्रीय शंकु अर्थव्यवस्था को। 1. इसमें दो शंकु है, एक शंकु विदेशी अर्थव्यवस्था को दर्शाता है, और दूसरा शंकु घरेलू अर्थव्यवस्था को दर्शाता है। 2. दोनों शंकु के मध्य में भारत सरकार है, जिसे दोनों अर्थव्यवस्था को नियंत्रित करना चाहिए। यदि आप नाव को नियंत्रित नहीं करेंगे, तब वह नाव दिशाहीन होकर समुद्र में खो जायेगा, इसका फायदा समुद्री डाकू उठायेगा। 3. भारत सरकार को चाहिए की वह दोनों शंकु को इस तरह संतुलित करे की , धन का प्रवाह विदेश अर्थव्यवस्था की तरफ नकारात्मक और घरेलू अर्थव्यवस्था की तरफ सकारात्मक हो। 4. इसके लिए, भारत सरकार को चाहिए की वह अपना बजट का 80% हिस्सा डिजिटल करेंसी के रूप में घरेलू अर्थव्यवस्था को दे, जबकि 20% छपाई के रुपए के रूप में विदेशी अर्थव्यवस्था हेतु उपलब्ध कराए। 5. घरेलू अर्थव्यवस्था को विदेशी अर्थव्यवस्था से अलग किया जाए। विदेशी वस्तुओं की बिक्री हेतु भारत में अलग स्टोर बनाने के लिए बाध्य किया जाए। विदेशी वस्तुओं को खरीदने के लिए अलग मुद्रा (छपाई के रुपए) का इस्तेमाल को ही स्वीकृति दिया जाए। 6. जब दूसरा देश दबाव डाले की हमें भारत में व्यापार करने में बढ़ा उत्पन्न किया जा रहा है, तब उन्हें स्पष्ट कहा जाना चाहिए की हम अपने देश में रोजगार सृजन करने , भुखमरी को खत्म करने का प्रयास कर रहे हैं। 7. दूसरे देशों के राष्ट्रध्यक्ष को धोखा देने के लिए, उन्हें कहा जाए की अभिभ्रात में लोकसभा चुनाव है। लोकसभा चुनाव खत्म होते ही भारतीय अर्थव्यवस्था आप सभी के लिए खोल देंगे, ताकि विदेशियों को भारत में व्यापार करना सुगम हो जाए। 8. अभी भारतीय श्रमिक और मजदूर स्पाइरल शंकु के सबसे नीचे है और एक बार हाथ से पैसा बाजार में खर्च हो गया तो अगले कई दिनों बाद अथवा अगले वर्ष ही पैसा हाथ में आता है। क्योंकि कृषि उत्पाद वर्ष में 2 बार हो बेचने का मौका मिलता है किसानों को। 9. spiral cone में पैसा जितनी तेजी से निम्न वर्ग से उच्च वर्ग को तरफ बढ़ता है, उतनी ही तेजी से निम्न वर्ग का गरीबी बढ़ता है, परिणाम स्वरूप स्वदेशी अर्थव्यवस्था का शंकु का शीर्ष छोटा होता जाता है और निम्न वर्ग का व्यास बढ़ता जाता है। 10. भारत सरकार को अब अनुदान देने के बजाय, निवेश कार्य में धन लगाना चाहिए। ताकि घरेलू अर्थव्यवस्था में वृद्धि हो। 11. अभी भारत सरकार का पैसे जैसे ही भारतीय श्रमिक, भारतीय नौकरशाह को मिलता है। वैसे ही विदेशी कंपनियां, ब्रांडेड सामान का चमक दिखाकर( विज्ञापन द्वारा भ्रमित कर), उस धन को भारतीय घरेलू अर्थव्यवस्था से चूस लेता है और विदेश भेज देता है। 12. ऐसा होने से रोकने के लिए, भारतीयों को दो प्रकार से धन मुहैया कराया जाए। ताकि विदेशी ब्रांडेड सामान खरीद ही न पाए। जो भारतीय फिर भी अपने धन का बड़ा हिस्सा विदेशी सामान खरीदने का प्रयास करे उन्हें अलग अलग तरीके से हतोत्साहित करने का उपाय खोजा जाए। 13. भारत में किसी भी वस्तु के उत्पादन लागत का 30% से अधिक लाभ अर्जित करना, अपराध घोषित किया जाए। इससे भारतीय निम्न वर्ग कम धन में अधिक आवश्यक सामग्री खरीद सकेगा। 14. विदेश में कच्चा कृषि उत्पाद की जगह पैकेट बंद तृतियक उत्कृष्ट उत्पाद भेजा जाए। डोमिनोज पिज्जा की जगह देल्ही पिज्जा को ब्रांड बनाया जाए। 15. कच्चा धात्विक खनिज विदेश भेजने के बजाय, घरेलू उद्योग से उत्कृष्ट धात्वीक सामग्री बनाकर निर्यात किया जाए। 16. उद्योग में अकुशल मजदूर को बुलाकर ट्रेनिंग देकर कुशल श्रमिक बनाया जाए। 17. विदेशी अर्थव्यवस्था वाले से शंकु से धन चूसकर, घरेलू अर्थव्यवस्था वाले शंकु की तरफ प्रवाहित किया जाए। यह कार्य दोनों शंकु के मध्य बैठे भारत सरकार को करना ही होगा। 18. यदि भारत सरकार चीन को सरकार की तरह सक्रियता दिखाए तो भारतीय अर्थव्यवस्था का स्वर्णिम दौर शुरू हो सकता है। 19. अभी तो भारतीय अर्थव्यवस्था से धन तेजी से विदेश को ओर जा रहा है, और निवेश एक तरह का हवा है जो मोटर से पानी निकालने के लिए भेजा जाता है। 20. बीजेपी को वोट भारतीय बेरोजगारों, श्रमिकों और किसानों से ही मांगना है तो एक वर्ष इन्हें ही क्यों न तृप्त किया जाए। फिर चुनाव जीतकर आएंगे, तब उद्योगपतियों और पूंजीपतियों के लिए चार वर्ष तक जी भरकर काम कीजिएगा।
  • Vishal Kumar January 07, 2023

    Jai ho
  • प्रकाश सिंह January 07, 2023

    प्रकाश सिंह ग्राम पंचायत पाली जिला नागौर तहसील डेगाना किसान छोटा सा मोदी जी नमन नमन नमस्कार आप ऐसे दासा दे रहे हो किसान लोगों को किसी के खाते में छोटे-मोटे गरीब आदमी को कोई के भी पैसा आ रहा है तो आ रहा है किसी के नहीं आ रहा था राशन कार्ड बनाओ तो जनता को राशन कार्ड बना लिया था अभी किसी का है किसी के नहीं आया ऐसा क्या है बताते तो आप बड़ी बड़ी बातें फेंक देते हैं करते कुछ भी नहीं है जय हिंद जय भारत
  • virender gihara January 07, 2023

    modi ji jindabad BJP virendar gihara zila upadhyax zila uttar paschim Delhi
  • Dr Upendra Kumar Oli January 07, 2023

    माननीय प्रधान मंत्री महोदय इतना अधिक विकास होने के बाद भी हम दिल्ली , हिमाचल एवम अन्य जगह अपना विश्वास क्यों नही बना पा रहे हैं यह एक बहुत बड़ी सोचने की बात है , मैं बहुत व्यथित हूं, इस पर अलग से कार्य करने की जरूरत है हम क्यों उन समर्थन न करने बालों के दिलों में जगह नहीं बना पा रहे हैं जो की सब कुछ मिलने के बाद भी सरकार को समर्थन नहीं दे रहे हैं डा उपेंद्र कुमार ओली हल्द्वानी उत्तराखंड।
  • Narayan Singh Chandana January 07, 2023

    जल ही जीवन है माननीय प्रधानमंत्री जी का संदेश एवं पहल आमजन के हित में
  • Hanif Ansari January 06, 2023

    Jai hind Jai bjp manniya modi ji
  • Hanif Ansari January 06, 2023

    Namaste bharat bhumi hindu
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy

Media Coverage

India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi greets the people of Arunachal Pradesh on their Statehood Day
February 20, 2025

The Prime Minister, Shri Narendra Modi has extended his greetings to the people of Arunachal Pradesh on their Statehood Day. Shri Modi also said that Arunachal Pradesh is known for its rich traditions and deep connection to nature. Shri Modi also wished that Arunachal Pradesh may continue to flourish, and may its journey of progress and harmony continue to soar in the years to come.

The Prime Minister posted on X;

“Greetings to the people of Arunachal Pradesh on their Statehood Day! This state is known for its rich traditions and deep connection to nature. The hardworking and dynamic people of Arunachal Pradesh continue to contribute immensely to India’s growth, while their vibrant tribal heritage and breathtaking biodiversity make the state truly special. May Arunachal Pradesh continue to flourish, and may its journey of progress and harmony continue to soar in the years to come.”