தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார். “தொழில்நுட்பப் போக்குகள் விரைவாக மாறிவருகின்றன. இந்தப் போக்குகள் குறித்து அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம். தொழில்நுட்பத்தைக் கண்டு பயப்படுவது நல்லதல்ல. தொழில்நுட்பம் ஒரு நண்பன். தொழில்நுட்பம் குறித்த அறிவு மட்டும் போதாது. அதன் பயன்பாடும் மிகவும் முக்கியமானது,” என்று பிரதமர் மோடி கூறினார்.
தொழில்நுட்பமற்ற நேரம் அவசியம் என்று வலியுறுத்திய பிரதமர், இதனால், நாம் நமது குடும்பத்தினர், நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்றார். “தொழில்நுட்பம் இல்லாத ஒரு மணி நேரத்தை செலவிடுவது குறித்து நம்மால் சிந்திக்க இயலுமா? நமது வீட்டில் ஒரு அறை தொழில்நுட்பம் அறவே அற்றதாக இருக்க வேண்டும். இந்த அறையில் நுழைபவர்கள் யாரும் கருவிகளைக் கொண்டு செல்லக்கூடாது.” என்று பிரதமர் கூறினார்.