குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் நிர்வாகத்தில் புதிய சிந்தனைகளையும் புதிய அணுகுமுறையையும் அரசு கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். நிர்வாகத்தில் இத்தகைய புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக அவர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை சுட்டிக் காட்டினார். 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியாவில் மொத்தம் 59 கிராமப் பஞ்சாயத்துகளில்தான் அகன்றவழிப்பட்ட இணைய வசதி இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அகன்றவழிப்பட்ட இணையவசதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 80 ஆயிரம் பொதுச்சேவை மையங்கள் இருந்தன. ஆனால் இன்று இவற்றின் எண்ணிக்கை 3 லட்சத்து 65ஆயிரத்துக்கும் மேலானதாகும். இந்த மையங்களில் பணிபுரியும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமாக மக்கள் பெறுவதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல்வழிப்பட்ட பரிவர்த்தனை மேடையாக உலக அளவில் பீம் செயலி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே பீம் செயலியின் மூலம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் கோடிக்கான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ரூபே கடன் அட்டைகளும் கூட பல நாடுகளிலும் இப்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

நீராதார இயக்கம்

இந்த அரசின் அணுகுமுறைக்கு மற்றொரு சிறந்த உதாரணம் நீர் ஆதார இயக்கம் என்றும் பிரதமர் கூறினார். குழாய் மூலமாக குடிநீர் வசதியை ஒவ்வொரு குடும்பத்திற்கு வழங்குவது என்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம் உள்ளூர் நிர்வாகத்தின் மிகச் சிறந்த முன்மாதிரி ஆகும் என்றும் அவர் கூறினார்.

இந்த இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியிருந்த போதிலும், அதன் நிர்வாகம் கிராமப்புற அளவில்தான் இருந்துவருகிறது. கிராமப்புறக் குழுக்கள்தான் இவற்றை அமல்படுத்துகின்றன; அதற்கான நிதியை நிர்வகிக்கின்றன; குழாய் பதித்தல், சேமிப்பு டேங்குகளை கட்டுதல் போன்றவை தொடர்பான முடிவுகளையும் எடுக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டுறவுத் தன்மை கொண்ட கூட்டாட்சி முறைக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு: விருப்பங்கள் நிறைந்த மாவட்டங்கள் திட்டம்

நாட்டில் நூறுக்கும் மேற்பட்ட விருப்பங்கள் நிறைந்த மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மற்றும், மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்த வகையில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். விருப்பங்கள் நிறைந்த மாவட்டங்கள் திட்டத்தை அமலாக்கும் நிறுவனமாக அந்தந்த மாவட்டங்களே திகழும் நிலையில் கூட்டுறவுத் தன்மை கொண்ட கூட்டாட்சிக்கான மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக இது விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். விருப்பங்கள் நிறைந்த மாவட்டங்களில் உள்ள ஏழைகள், பழங்குடிகள் ஆகியோரின் மேம்பாட்டிற்காகவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்காகவும் உணர்வு பூர்வமாகச் செயல்படுவது

நாட்டிலுள்ள பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்த போராளிகளுக்கு உரிய மரியாதை கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன; ஆய்வு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன; பழங்குடிகளின் கலை மற்றும் இலக்கியம் ஆகியவை டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகின்றன. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திறமைமிக்க குழந்தைகளுக்கு தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. “இவை போக, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வனத்தில் கிடைக்கும் பொருட்களில் இருந்து மேலும் அதிகமான வருமானத்தை பெறுவதற்கென 3 ஆயிரம் வனச் செல்வ மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் 30 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 900 மையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. இவற்றில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடிகள் இணைக்கப்பட்டுள்ளனர்” என்றும் பிரதமர் கூறினார்.

பெண்கள் வலிமைப்படுத்தலில் அரசு உறுதி பூண்டுள்ளது

பெண்கள் வலிமைப்படுத்தலுக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். “ நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவப் பள்ளிகளில் பெண்களை அனுமதிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ராணுவ காவல் பிரிவில் பெண்களை நியமிக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார். நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கென 600க்கும் மேற்பட்ட ஒற்றை நிறுத்த மையங்கள் கட்டப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஆறாவது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயிலும் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாலியல் குற்றங்கள் புரிபவர்களை விரைவாகக் கண்டறிந்து பிடிப்பதற்கென தேசிய அளவிலான புள்ளிவிவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வன்முறை ஆகிய மோசமான குற்றங்களை கையாளும் வகையில் போஸ்கோ சட்டத்திற்குள் அடங்கும் குற்றங்களின் வரம்பினை விரிவாக்கும் வகையில் போஸ்கோ சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அளவிற்குள் தண்டனை வழங்குவதை உத்தரவாதம் செய்ய நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துரித விசாரணை நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
From Ghana to Brazil: Decoding PM Modi’s Global South diplomacy

Media Coverage

From Ghana to Brazil: Decoding PM Modi’s Global South diplomacy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 12, 2025
July 12, 2025

Citizens Appreciate PM Modi's Vision Transforming India's Heritage, Infrastructure, and Sustainability