“This is a moment of capability of the 140 crore heartbeats and the confidence of new energy of India”
“In the first light of ‘Amrit Kaal’, this is ‘Amrit Varsha’ of success”
“India has reached the South Pole of the Moon where no country in the world could reach to date with the dedication and talent of our scientists”
“Time is not far when the children would say ‘Chanda Mama ek tour ke’ i.e. the moon is only a tour away”
“Our moon mission is based on human-centric approach. Therefore, this success belongs to all of humanity”
“We'll test the limits of our solar system, and work to realize the infinite possibilities of the universe for humans”
“India is proving again and again that the sky is not the limit”

"இது 140 கோடி இதயத் துடிப்புகளின் திறன் மற்றும் இந்தியாவின் புதிய ஆற்றலின் நம்பிக்கையின் தருணம்"

 

"'அமிர்தக் கால' படத்தின் முதல் ஒளியில், இது வெற்றியின் 'அமிர்த மழை’.

 

‘’நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் உலகில் எந்த நாடும் எட்ட முடியாத நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்துள்ளது’’.

 

"குழந்தைகள் ' சந்திரனுக்கு ஒரு சுற்றுலா ' என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை, அதாவது சந்திரன் ஒரு சுற்றுலா தூரத்தில் உள்ளது"

 

"நமது நிலவுப் பயணம் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் முழுமைக்கும் உரியது’’.

 

"எங்கள் சூரியக் குடும்பத்தின் வரம்புகளை நாங்கள் சோதிப்போம், மேலும் மனிதர்களுக்கான பிரபஞ்சத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேலை செய்வோம்"

 

‘’வானம் எல்லை இல்லை என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது’’.

 

 

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதைக் காண பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி  மூலம் இஸ்ரோ குழுவுடன் இணைந்தார். வெற்றிகரமாகத் தரையிறங்கிய உடனேயே, இஸ்ரோ குழுவிடம் உரையாற்றி வரலாற்றுச் சாதனைக்காக அவர்களை பிரதமர் வாழ்த்தினார்.

 

குடும்ப உறுப்பினர்களாக குழுவிடம் உரையாற்றிய பிரதமர், இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் ஒரு தேசத்தின் நித்திய நனவாக மாறும் என்றும் கூறினார். "இந்தத் தருணம் மறக்க முடியாதது, முன்னெப்போதும் இல்லாதது. 'வளர்ந்த பாரதம்' என்ற முழக்கத்தின் தருணம், இந்தியாவுக்கு வெற்றி அழைப்பு, கஷ்டங்களின் கடலைக் கடந்து வெற்றியின் 'சந்திரப்பாதை'யில் நடக்கும் தருணம் இது. இது 140 கோடி இதயத் துடிப்புகளின் திறன் மற்றும் இந்தியாவின் புதிய சக்தியின் நம்பிக்கையின் தருணம். இது இந்தியாவின் வளர்ந்து வரும் அதிர்ஷ்டத்தை ஊக்குவிக்கும் தருணம்" என்று பிரதமர் மகிழ்ச்சியுடன் கூறினார். ‘'அமிர்தக் கால' படத்தின் முதல் ஒளியில், இது வெற்றியின் 'அமிர்த மழை ஆகும்" என்று பிரதமர் மேலும் கூறினார். விஞ்ஞானிகளை மேற்கோள் காட்டிய பிரதமர், "இந்தியா இப்போது நிலவில் உள்ளது!" என்று கூறினார். புதிய இந்தியாவின் முதல் எழுச்சியை நாம் இப்போதுதான் பார்த்தோம் என்று அவர் கூறினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாம் தற்போது ஜோகன்னஸ்பர்க்கில் இருப்பதாகவும், ஆனால் மற்ற குடிமக்களைப் போலவே தனது மனமும் சந்திரயான் 3-இன் மீது கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு இந்தியரும் கொண்டாட்டத்தில் தங்களை மூழ்கடித்துள்ளதாகவும், இந்த சிறப்பான தருணத்தில் ஒவ்வொரு குடிமகனுடனும் உற்சாகத்துடன் இணைந்திருப்பதால் இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டாட்டமான நாள் என்றும் அவர் கூறினார். சந்திரயான் குழு, இஸ்ரோ மற்றும் பல ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளையும் பிரதமர் பாராட்டினார், மேலும் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி நிறைந்த இந்த அற்புதமானத் தருணத்திற்காக 140 கோடி நாட்டு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

"நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் உலகின் எந்த நாடும் இன்று வரை அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை இந்தியா அடைந்துள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார். சந்திரன் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் கதைகள் அனைத்தும் இனி மாறும் என்றும் பழமொழிகள் புதிய தலைமுறைக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கும் என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பூமியை 'அன்னை' என்றும், சந்திரனை 'மாமா' என்றும் கருதும் இந்திய நாட்டுப்புறக் கதைகளைக் குறிப்பிட்டப் பிரதமர், சந்திரன் மிகவும் தொலைவில் இருப்பதாகக் கருதப்படுவதால், 'சந்திரன் தூரத்தில் உள்ளது’ என்று குறிப்பிடப்படுகிறது, ஆனால் குழந்தைகள் ' சந்திரனுக்கு ஒரு சுற்றுலா ' என்று சொல்லும் நேரம் வெகு தொலைவில் இல்லை, அதாவது சந்திரன் ஒரு சுற்றுப்பயணத் தூரத்தில் உள்ளது என்று அவர் கூறினார். 

உலக மக்கள் மத்தியில், ஒவ்வொரு நாடு மற்றும் பிராந்திய மக்களிடையே உரையாற்றிய பிரதமர், "இந்தியாவின் வெற்றிகரமான நிலவுப் பயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல. இந்தியாவின் ஜி-20 மாநாட்டை உலகமே உற்று நோக்கும் ஆண்டு இது. 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற நமது  அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மனித மைய அணுகுமுறை உலகளவில் வரவேற்கப்பட்டுள்ளது. நமது நிலவுப் பயணமும் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் முழுமைக்கும் உரியது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளின்  நிலவுப் பயணங்களுக்கு  இது உதவும்" என்று  திரு மோடி கூறினார். "உலகளாவிய தெற்குப் பகுதி உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இதுபோன்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் சந்திரனுக்காகவும் அதற்கு அப்பாலும் ஆசைப்பட முடியும்." என்றார் அவர்.

சந்திரயான் மகா அபியான் திட்டத்தின் சாதனைகள் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் இந்தியாவின் பயணத்தை கொண்டு செல்லும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். "நமது சூரியக் குடும்பத்தின் வரம்புகளை நாங்கள் சோதிப்போம், மனிதர்களுக்கான பிரபஞ்சத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேலை செய்வோம்" என்று திரு மோடி குறிப்பிட்டார். எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது குறித்து எடுத்துரைத்தப் பிரதமர், சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுக்காக இஸ்ரோ விரைவில் 'ஆதித்யா எல் -1' திட்டத்தைத் தொடங்கப் போகிறது என்றும் தெரிவித்தார். இஸ்ரோவின் இலக்குகளில் வீனஸும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். "வானம் எல்லை அல்ல என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது", என்று கூறிய பிரதமர், மிஷன் ககன்யான் திட்டத்தை எடுத்துரைத்தார், அங்கு இந்தியா தனது முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது.

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அறிவியலும் தொழில்நுட்பமும்தான் அடிப்படை என்று பிரதமர் வலியுறுத்தினார். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல இந்த நாள் நம் அனைவரையும் ஊக்குவிக்கும் என்றும், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வழியைக் காட்டும் என்றும் அவர் கூறினார். "தோல்வியின் படிப்பினைகளில் இருந்து வெற்றி எவ்வாறு அடையப்படுகிறது என்பதை இந்த நாள் குறிக்கிறது" என்று கூறிய பிரதமர், விஞ்ஞானிகளின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."