QuoteNew reforms announced in the Budget not only give a boost to the economy: PM
QuoteBudget aims at the economic empowerment of every citizen in the country: PM Modi
QuoteThe Union Budget adopts an integrated approach for the Agriculture sector: PM Modi

மத்திய பட்ஜெட் 2020 தொலைநோக்கு சிந்தனை மற்றும் செயல்திட்டத்துடன் கூடியது என பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். >

மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசிய பிரதமர், “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதுடன், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கவும் வகை செய்யும்” என்று கூறியுள்ளார். >

“இந்த பட்ஜெட் புதிய தசாப்தத்தில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். >

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் >

2020 பட்ஜெட் வேலைவாய்ப்புகளை பெருமளவு உருவாக்கும் துறைகளான விவசாயம், அடிப்படைக் கட்டமைப்பு, ஜவுளி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். >

“16 அம்ச செயல்திட்டம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுவதுடன், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வகைசெய்யும்” என்று அவர் கூறினார். >

“வேளாண்மைத் துறையில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றியுள்ள மத்திய பட்ஜெட், பாரம்பரிய சாகுபடி முறைகள் தவிர, தோட்டக்கலைத் துறை, மீன்வளம், கால்நடை வளர்ப்பு துறைகளிலும் மதிப்புக் கூட்டு முறையை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வகை செய்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். >

“நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மீன் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும்”.>

|

ஜவுளித்துறை >

தொழில்நுட்பம் மிகுந்த ஜவுளி உற்பத்தியில் புதிய இயந்திரங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். >

இந்தியாவில் மனிதர்களால் தயாரிக்கப்படும் இழைகள் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக, கச்சாப் பொருள் மீதான வரிக்கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். >

சுகாதாரத்துறை >

“ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இது, மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது உதவியாளர்கள் உள்ளிட்ட மனிதவளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியிருப்பதுடன், உள்நாட்டிலேயே மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முடிவுகளை மேற்கொண்டுள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார். >

தொழில்நுட்பத் துறை >

தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முயற்சிகளை அரசு மேற்கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார். “பொலிவுறு நகரங்கள், மின்னணு சாதன உற்பத்தி, புள்ளிவிவர மையப் பூங்காக்கள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்றவற்றில் பல்வேறு கொள்கை முன்முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் சர்வதேச மதிப்புச் சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா மாறும்” >

“பட்டப்படிப்புகளில் தொழில் பழகுநர் பயிற்சி, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளுறைப் பயிற்சி மற்றும் ஆன்லைன் பட்டப்படிப்பு போன்ற புதிய மற்றும் புதுமையான முன்முயற்சிகள் மூலம் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். >

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்ட அவர், சிறுதொழில்களுக்கு நிதியுதவி அளித்து, ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.>

அடிப்படைக் கட்டமைப்பு>

நவீன இந்தியாவிற்கு அதிநவீன கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுவதோடு, இந்தத் துறை வேலைவாய்ப்புகளை பெருமளவு உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.>

“6,500 திட்டங்களில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்யப்பட்டு வருகிறது, இத்துறை வேலைவாய்ப்புகளை பெருமளவுக்கு உருவாக்கும் திறன் கொண்டது. தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, வர்த்தகம், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவியாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். >

“100 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமளிப்பதோடு, பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்று அவர் தெரிவித்தார். >

முதலீடு >

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முதலீடு அவசியம் என்பதால், இதனை அதிகரிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். >

“பங்குப்பத்திர சந்தைகளை வலுப்படுத்தி, கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்டகாலம் நிதியுதவி அளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று லாப ஈவுத்தொகை பட்டுவாடா வரி ஒழிக்கப்படுவதன் மூலம் கம்பெனிகளின் கூடுதல் முதலீட்டிற்குத் தேவையான 25,000 கோடி ரூபாய் கிடைக்கும்”. >

“அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும் ஏராளமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார். >

வரிவிதிப்பு முறையில் நம்பிக்கை ஏற்படுத்த சிறப்புக் கவனம் >

வருமான வரி விதிப்பு முறையில் சச்சரவுகள் இன்றி, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உகந்த சூழலை அரசு உருவாக்கி இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
“சிறு தவறுகள் கூட கம்பெனி சட்டத்தில் கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றை குற்றமற்ற செயல்களாக மாற்றுவதற்கு முக்கிய முடிவினை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்” >

“வரி செலுத்துவோர் அட்டவனையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம், இது வரி செலுத்துவோரின் உரிமைகளை பட்டியலிடும்”. >

அதேபோன்று, ரூ.5 கோடி வரை விற்று-வரவு உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கணக்கை கட்டாயம் தணிக்கை செய்ய தேவையில்லை என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். >

“முன்பு இந்த உச்சவரம்பு ரூ.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.>

அரசுப்பணிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்வு >

“தற்போது அரசின் பல்வேறு வேலைகளுக்கு நாட்டிலுள்ள இளைஞர்கள் பல்வேறு தேர்வுகளை எழுதவேண்டியுள்ளது. இதில் நடைமுறை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, வங்கிகள், ரயில்வே அல்லது வேறுஎந்த அரசுப்பணியாக இருந்தாலும், தேசிய ஆள்சேர்ப்பு முகமை இனி, ஆன்லைன் முறையில் பொதுவான ஒரே தேர்வை நடத்தும்” என்று அவர் தெரிவித்தார். >

குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுகை>

முக அறிமுகமில்லாத மேல்முறையீடு, எளிமைப்படுத்தப்பட்ட நேரடி வரி விதிப்பு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கலை அதிகரிப்பதற்கான முயற்சிகள், சீரான கொள்முதல் நடைமுறை, தானியங்கி பதிவு முறை போன்ற அனைத்து முயற்சிகளும், குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுகையை உறுதி செய்யும் என பிரதமர் குறிப்பிட்டார். >

தொழில் தொடங்குதல் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் >

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள அங்கன்வாடிகள், பள்ளிக்கூடங்கள், நலவாழ்வு மையங்கள் மற்றும் காவல்நிலையங்கள், அகன்ற கற்றை இணையதளம் மூலம் இணைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.>

இது, “தொழில் தொடங்குதல் & வாழ்க்கையை எளிதாக்க” உதவும் என்று அவர் கூறினார். >

“இந்த நடவடிக்கை தொலை தூரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை அகன்ற கற்றை மூலம் இணைக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். >

மொத்தத்தில் மத்திய பட்ஜெட் 2020, வருமானம் மற்றும் முதலீடு, தேவை & நுகர்வை வலுப்படுத்தி, நிதியமைப்புகளின் செயல்பாடு மற்றும் எளிதாக கடன் வழங்குவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். >

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy

Media Coverage

India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 20 பிப்ரவரி 2025
February 20, 2025

Citizens Appreciate PM Modi's Effort to Foster Innovation and Economic Opportunity Nationwide