மாண்புமிகு தலைவர்களே

வணக்கம்!

இன்று ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ தொடக்கத் திட்டத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறீர்கள். சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணி மற்றும் இங்கிலாந்தின் பசுமைமின் தொகுப்பு நடவடிக்கை, எனது பல ஆண்டு தொலைநோக்காக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ திட்டம் இன்று வலுவான உருவத்தைப் பெற்றுள்ளது.   மாண்புமிகு தலைவர்களே தொழில்புரட்சி, படிம எரிபொருள்களால் ஏற்பட்டது. பல நாடுகள் படிம எரிபொருள்களால் செழிப்படைந்துள்ளன.   ஆனால் நமது பூமி மற்றும் சுற்றுச்சூழல் மோசமடைந்து. படிம எரிபொருள் கண்டுப்பிடிப்புக்கான போட்டி பூலோக –அரசியல் பதற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால் இன்று தொழில்நுட்பம் நமக்கு மிகப் பெரிய மாற்றை அளித்துள்ளது.      

மாண்புமிகு தலைவர்களே

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரிய உபநிடத்தில் அனைத்துமே சூரியனிலிருந்து உருவானதென கூறப்பட்டது. அனைத்து வகையான ஆற்றலுக்கும் சூரியன் தான் மூலக்காரணமாக உள்ளது.   சூரியசக்தியால்தான் அனைத்துமே நீடிக்கிறது.  பூமியில் வாழ்க்கை தொடங்கியதிலிருந்து உயிரினங்களின் வாழ்க்கை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இயற்கையுடனான இணைப்புத் தொடரும் வரை நமது பூமி ஆரோக்கியமாக இருக்கும். நவீன யுகத்தில் சூரியன் ஏற்படுத்திய வாழ்க்கைச் சுழற்சியை மிஞ்சும் போட்டியில் மனிதன் உள்ளான்.  இது இயற்கை சமநிலையைப் பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையுடனான சமநிலையான வாழ்வை நாம் மீண்டும் ஏற்படுத்தினால் நமது வாழ்க்கைப் பாதை சூரிய ஒளியுடன் ஜொலிக்கும். மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க, சூரியனுடன் நாம் மீண்டும் இணைந்து செல்ல வேண்டும்.  

மாண்புமிகு தலைவர்களே

ஓராண்டில் மனிதன் பயன்படுத்தும் முழு ஆற்றலின் அளவை சூரியன் பூமிக்கு ஒரு மணி நேரத்தில் அளிக்கிறது. இந்த மிகப் பெரிய ஆற்றல் மிகவும் சுத்தமானது மற்றும் நிலையானது. இதில் இருக்கும் ஒரே சவால் பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கும் மற்றும் இது பருவநிலையைச் சார்ந்தது. இந்த சவாலுக்கான தீர்வு ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்புத் திட்டம்.

உலகளாவிய மின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் சுத்தமான எரிசக்தி, எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும். சேமிப்பின் தேவையை இது குறைக்கும் மற்றும் சூரிய மின் சக்தி திட்டங்களின் சாத்தியங்களை அதிகரிக்கும்.  இந்த முயற்சி  கார்பன் பயன்பாட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல் எரிசக்திச் செலவையும் குறைக்கும். ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்பு மற்றும் பசுமை மின்தொகுப்பு திட்டங்களிடையேயான ஒத்திசைவு உலகளாவிய மின்தொகுப்பை உருவாக்க வழிவகுக்கும். எங்களது விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, சூரிய மின்சக்தி கால்குலேட்டர் செயலியை உலகுக்கு அளிக்கப்போகிறது. இந்த கால்குலேட்டர் மூலம் உலகின் எந்த இடத்திலும் உள்ள சூரிய மின் சக்தி ஆற்றல் செயற்கைக் கோள் தரவுகள் மூலம் அளவிட முடியும்.   சோலார் மின்சக்தித் திட்ட இடங்களை தீர்மானிப்பதில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்புத் திட்டத்தைப் பலப்படுத்தும்.

மாண்புமிகு தலைவர்களே

சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியை நாம் மீண்டும் வாழ்த்துகிறேன் மற்றும் இந்த ஒத்துழைப்புக்காக எனது நண்பர் போரிஸ் ஜான்சனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
25% of India under forest & tree cover: Government report

Media Coverage

25% of India under forest & tree cover: Government report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi