துயரமான இந்த நேரத்தில் நாம் இன்று சந்திக்கிறோம். இன்று ஜப்பானுக்கு வந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனெனில், கடந்த முறை நான் ஜப்பான் வந்தபோது திரு.ஷின்சோ அபேவுடன் நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நான் இங்கிருந்து சென்ற பிறகு இப்படியொரு செய்தியை கேட்க நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.
அபேவுடன் இணைந்து வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நீங்கள் இந்தியா-ஜப்பான் உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றதுடன், மேலும் பல வகைகளிலும் விரிவுப்படுத்தியுள்ளீர்கள். மேலும் இந்தியா-ஜப்பான் இடையேயான நட்பு உலகளாவிய தாக்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியது. இதற்காக இந்திய மக்கள் அனைவரும் தற்போது அபே-வையும், ஜப்பானையும் நினைவில் வைத்துள்ளார்கள். இந்தியாவுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது.
தற்போது உங்கள் தலைமையின்கீழ், இந்தியா - ஜப்பான் உறவுகள் மேலும் விரிவடைவதுடன், உயரும் என்று நான் நம்புகிறேன். உலகில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் சிறந்த பங்காற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.