சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர், நமது விருந்தினரை உபசரிப்பது ஒரு சிறப்பு அனுபவம் என்று கூறினார். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய அனுபவமும், மகிழ்ச்சியும் ஒப்பிட முடியாதது என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ள நண்பர்களை சௌராஷ்டிரா மக்கள் அதே உற்சாகத்துடன், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் முதலமைச்சராக இருந்த போது 2010-ம் ஆண்டு மதுரையில் இதுபோன்ற சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அதில் சௌராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து விருந்தினர்கள் அதே பாசத்துடன் சௌராஷ்டிரா வந்துள்ளதாக அவர் கூறினார். விருந்தினர்கள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாகவும், கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை ஏற்கனவே பார்வையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் கடந்த காலத்தின் விலைமதிப்பற்ற நினைவுகள், தற்காலத்திற்கான அனுபவங்கள், எதிர்காலத்திற்கான தீர்மானங்கள் மற்றும் உத்வேகங்களை காணலாம் என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சிக்காக சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் அவர் வாழ்த்து கூறினார்.
இந்திய சுதந்திர அமிர்த காலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முக்கிய கலாச்சார நிகழ்வுகளை நாம் கொண்டாடி வருகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிராவின் சங்கமமாக மட்டுமல்லாமல் தேவி மீனாட்சி, தேவி பார்வதி உருவில் சக்தியை வழிபடும் திருவிழாவாகவும் உள்ளது என்று கூறினார். அத்துடன், கடவுள் சோம்நாத், கடவுள் ராம்நாத் ஆகிய வடிவில் சிவனை கொண்டாடும் விழாவாகவும் இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், இது சுந்தேர்ஷ்வரா, நாகேஷ்வரா ஆகிய மண்ணின் சங்கமம் என்றும் ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீ ரங்கநாதா ஆகியவற்றின் சங்கமம் என்றும் நர்மதா, வைகை, தாண்டியா, கோலாட்டம் ஆகியவற்றின் சங்கமம் என்றும், துவாராகா, பூரி போன்ற ஆலயங்களின் புனிதமான பாரம்பரியத்தின் சங்கமம் என்றும் அவர் கூறினார். தமிழ் சௌராஷ்டிரா சங்கமம் என்பது சர்தார் பட்டேல், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் தேசபக்தி தீர்மானத்தின் சங்கமம் ஆகும் என்று அவர் தெரிவித்தார். நாட்டை கட்டமைப்பதில் இந்த பாரம்பரிய பாதையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார். பன்முகத் தன்மையை சிறப்பம்சமாக இந்திய நாடு காண்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு மொழிகள், பேச்சுவழக்கு, கலை வடிவங்கள் ஆகியவை நாடு முழுவதும் கொண்டாடப்படுவதாக கூறினார். இந்தியா நம்பிக்கையிலும், ஆன்மீகத்திலும் பன்முகத் தன்மையை காண்பதாக குறிப்பிட்ட பிரதமர், கடவுள் சிவா, கடவுள் பிரம்மா ஆகியோரை வணங்குவதை உதாரணமாக சுட்டிக்காட்டினார். நமது பன்முக வழிகளில் புனித நதிகளில் நீராடுவதை அவர் எடுத்துரைத்தார். இந்த பன்முகத் தன்மை, நம்மை பிரிக்காமல், நமது பிணைப்பையும், உறவையும் வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பல்வேறு நீரோடைகள், இணையும் போது, சங்கமம் உருவாகுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கும்பமேளா போன்ற நிகழ்வுகள் நதிகளின் சங்கமத்தில் நடைபெறுவதாகக் கூறினார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் இன்று புதிய வடிவத்தை நோக்கி முன்னோக்கி செல்வது, இந்த சங்கமத்தின் சக்தியாகும் என்று அவர் தெரிவித்தார். சர்தார் பட்டேலின் ஆசீர்வாதத்துடன் இதுபோன்ற சிறப்பான விழாக்கள் மூலம் நாட்டின் ஒற்றுமை வடிவமைக்கப்படுவதாக அவர் கூறினார். ஒரே இந்தியா, உன்னத இந்தியா, என்று கனவு கண்டு தங்களது உயிரை தியாகம் செய்த லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீர்ரகளின் கனவுகளையும் இது நிறைவேற்றுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாரம்பரியத்தின் ஐந்து உறுதிமொழிகளை நினைவு கூர்ந்த பிரதமர், நமது பாராம்பரியத்தை அறிந்து கொள்ளும்போது அது குறித்த பெருமை அதிகரிக்கும் என்றும் அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை நாமே அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார். காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் இதே திசையிலான திறன்மிக்க இயக்கமாகும் என்று அவர் தெரிவித்தார். குஜராத்- தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள ஆழமான பிணைப்பை குறிப்பிட்ட பிரதமர், புராண காலங்களில் இருந்து இரு மாநிலங்களுக்கிடையேயும் தொடர்புள்ளதாக சுட்டிக்காட்டினார். மேற்கு மற்றும் தென்பகுதியைச் சேர்ந்த சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சார இணைப்பு ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்வதாக அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்கான இலக்குகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, 70 ஆண்டுகளில் அடிமைத்தனத்தின் சவால்கள், அழிவு சக்திகளின் திசைதிருப்பும் முயற்சி ஆகியவற்றின் அபாயம் இருப்பதாக கூறினார். இக்கட்டான காலக்கட்டங்களிலும் கூட புத்தாக்கங்களை உருவாக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பதற்கு சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் வரலாறுகளே சாட்சி என்றார். இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது, அந்த மாநிலத்தின் மொழி, மக்கள் மற்றும் சூழ்நிலை குறித்து, ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், சௌராஷ்ராவிலிருந்து ஏராளமானோர் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து இருப்பதையும் நினைவுகூர்ந்தார்.
நாம் செல்லும் மாநிலம் நம்முடைய நம்பிக்கை மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் என எதிர்பார்ப்போடு வந்த மக்களை தமிழ்நாடு இருகரம் நீட்டி வரவேற்றதுடன் அவர்களது புதுவாழ்வுக்கான அனைத்து வசதிகளையும், செய்து கொடுத்து இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதுவே ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார் பிரதமர்.
மற்றவர்களை தங்களது இல்லங்களுக்கு மகிழ்ச்சியோடு வரவேற்பவர்களுக்கு, மகிழ்ச்சி, செழுமை, அதிர்ஷ்டம் ஆகியவை தானாகத் தேடிவரும் என்ற திருவள்ளுவரின் திருக்குறளை சுட்டிக்காட்டிய அவர், கலாச்சார மோதல்களை புறந்தள்ளி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். போராட்டங்களை முன்னிலைப்படுத்தாமல், ஒற்றுமையின் அடையாளமான சங்கமத்தை முன்னிறுத்த வேண்டும் என்று கூறினார். நமக்குள் வேறுபாடு காணாமல், உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பைக் கருதியதாலேயே தமிழ்நாடு, சௌராஷ்டிரா மக்களை அகமகிழ்ந்து வரவேற்றது என்று தெரிவித்தார். தமது கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு வழிநடத்திச் செல்வதே இந்தியாவின் அழியாத பாரம்பரியம் என்றும் அதேநேரத்தில் சௌராஷ்டிரா மக்களின் மொழி, உணவு மற்றும் கலாச்சாரமும் நினைவு கூரத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்காற்றுவதையே நமது மூதாதையர்கள் தங்களது கடமையாக கொண்டிருந்தனர் என்றார். எனவே மக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு வருபவர்களை, அகமகிழ்ந்து வரவேற்பதுடன் அவர்கள் நிம்மதியாக வாழவும் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாக இருக்கும் என நம்புவதாகக் கூறி, பிரதமர் திரு நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முன் முயற்சியின் அடிப்படையில் நாட்டின் இரு வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையேயான நீண்ட நெடிய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே கண்ணோட்டத்தில் முன்னதாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. குஜராத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச்செல்லும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நூற்றாண்டுகள் முன்னதாக ஏராளமான மக்கள் சௌராஷ்ரா பிராந்தியத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரா மக்களுக்கு தங்களது வேர்களான குஜராத் பகுதிகளுடன் மற்றும் அப்பிராந்திய மக்களுடன் தொடர்பை புதுப்பித்துக்கொள்ள வழிவகுத்தது. இந்த 10 நாள் நிகழ்வில் 3,000-க்குட“ மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சௌராஷ்டிரா மக்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சோம்நாத்துக்கு வந்து சென்றனர். இம்மாதம் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 26-ம் தேதியுடன் சோம்நாத்தில் நிறைவடைகிறது.
आज आजादी के अमृतकाल में हम सौराष्ट्र-तमिल संगमम् जैसे सांस्कृतिक आयोजनों की एक नई परंपरा के गवाह बन रहे हैं। pic.twitter.com/YEybyX7sZb
— PMO India (@PMOIndia) April 26, 2023
भारत विविधता को विशेषता के रूप में जीने वाला देश है। pic.twitter.com/xcU41P34xD
— PMO India (@PMOIndia) April 26, 2023
देश ने अपनी ‘विरासत पर गर्व’ के ‘पंच प्राण’ का आवाहन किया है। pic.twitter.com/fWfJka9Dqu
— PMO India (@PMOIndia) April 26, 2023
भारत कठिन से कठिन हालातों में भी कुछ नया करने की ताकत रखता है। pic.twitter.com/iVHtCgemJ4
— PMO India (@PMOIndia) April 26, 2023
भारत की अमर परंपरा है - सबको साथ लेकर समावेश के साथ आगे बढ़ने की, सबको स्वीकार करके आगे बढ़ने की। pic.twitter.com/LIJzKnlpwL
— PMO India (@PMOIndia) April 26, 2023