எனதருமை நண்பர் ஸ்காட் அவர்களே, வணக்கம்!
க்யூன்ஸ்லாந்திலும், நியு சவுத் வேல்சிலும் வெள்ளம் காரணமாக உயிர் மற்றும் உடைமைகளை இழந்தோருக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாக நான் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணையவழியான நமது கடந்த உச்சி மாநாட்டின்போது நமது உறவை விரிவான ராணுவ ஒத்துழைப்புக்கு உயர்த்தினோம். இப்போது இரு நாடுகளுக்கு இடையே வருடாந்தர உச்சி மாநாடுகளுக்கான நடைமுறையை நாம் ஏற்படுத்துவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமது உறவின் தொடர்ச்சியான ஆய்வுக்கு கட்டமைப்பு நடைமுறையை உருவாக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக நமது உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பந்தோபஸ்து, கல்வி, புதிய கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மிக நெருக்கமான ஒத்துழைப்பை நாம் கொண்டிருக்கிறோம். நீர் நிர்வாகம், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, கொவிட்-19 ஆராய்ச்சி போன்ற மற்ற பல துறைகளிலும் நமது ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.
க்வாட் அமைப்பின் நமக்கிடையேயான ஒத்துழைப்பும் நன்றாக உள்ளது. சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா பசிபிக் என்பதற்கான நமது உறுதிப்பாட்டை நமது ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் தொன்மையான கலைப்பொருட்களை திருப்பித் தருவதற்கு முன்முயற்சி மேற்கொண்ட உங்களுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு திருப்பித் தந்த அனைத்து சிலைகளும் மற்ற பொருட்களும் அவற்றுக்கான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இன்று உங்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற்றதற்காக மீண்டும் ஒரு முறை நான் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன்.
இப்போது ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கு நன்றி சொல்வதுடன் தொடக்க அமர்வை நிறைவு செய்ய நான் விரும்புகிறேன். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் அடுத்த நிகழ்வு பற்றிய எனது கருத்தை நான் முன்வைக்க விரும்புகிறேன்.