Quote“தனது தெய்வீகக் குரலால் உலகம் முழுவதையும் சகோதரி லதா வென்றார்”
Quote"அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீராமர் வருகை தரவுள்ளார்"
Quote"ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடப்பதைக் கண்டு நாடு பரவசம் அடைந்துள்ளது"
Quote"இது 'பாரம்பரியத்தில் பெருமை' என்பதன் வலியுறுத்தலோ, நாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயமு் ஆகும்"
Quote"பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளமாகவும் மற்றும் நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றில் வாழும் சித்தாந்தமாகவும் உள்ளார்"
Quote"சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் பகவான் ராமரில் மூழ்கியது "
Quote"சகோதரி லதா பாடிய மந்திரங்கள் அவரது குரலை மட்டும் எதிரொலிக்காமல், அவரது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் தூய்மையையும் எதிரொலித்தது"
Quote" சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நீண்ட காலத்திற்கு இணைக்கும்"

அயோத்தியில் லதா மங்கேஷ்கர்  சதுக்கத்தை அர்ப்பணிக்கும்  நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்தி மோடி  இன்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சகோதரி லதாவின் பிறந்த தினம் ஒவ்வொரு இந்தியரின் வணக்கத்துக்குரியதும் மற்றும் பாசத்திற்குரியது என்றார். அன்னை சந்திரகாந்தாவை  வழிபடும் நவராத்திரி விழாவின் மூன்றாவது நாளையும் அவர் கொண்டாடினார். வணங்கும் ஒருவர், கடுமையான தவத்தில் ஈடுபடும்போது, ​​அன்னை சந்திரகாந்தாவின் அருளால் அவரோ அல்லது அவளோ தெய்வீகக் குரல்களை அனுபவித்து   உணர்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். “சகோதரி லதா, அன்னை சரஸ்வதியை வணங்குபவர்களில் ஒருவர்.அவர், தனது தெய்வீக குரலால் உலகம் முழுவதையும் வியக்க வைத்தார். சகோதரி லதா தவம்  செய்தார், நாம் அனைவரும் வரம் பெற்றோம்!” என்று பிரதமர் குறிப்பிட்டார். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அன்னை சரஸ்வதியின் பிரமாண்டமான வீணை, இசைப் பயிற்சியின் அடையாளமாக மாறும் என்று மோடி சுட்டிக்காட்டினார். சதுக்கத்தில் உள்ள ஏரியில் ஓடும் நீரில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட 92 வெள்ளைத் தாமரைகள் சகோதரி லதாவின் வாழ்நாளை குறிப்பதாக பிரதமர் மேலும் கூறினார்.

இந்த புதுமையான முயற்சிக்காக உத்தரபிரதேச அரசு மற்றும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தை பிரதமர் பாராட்டினார், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக சகோதரி லதாவுக்கு தனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்தினார். "அவரது மெல்லிசை பாடல்கள் மூலம் அவரது வாழ்விலிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்கள், எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று நான் கடவுள் ஸ்ரீராமரிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

சகோதரி லதாவின் பிறந்தநாள் தொடர்பான பல உணர்ச்சிகரமான மற்றும் அன்பான நினைவுகள் பற்றிய குறிப்பிட்ட பிரதமர், ​​ அவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் அவரது பிரபலமான குரலின் இனிமை தன்னை ஈர்த்தது என்று கூறினார்."சகோதரி லதா, அடிக்கடி என்னிடம் கூறுவது: 'மனிதன் வயதினால் அறியப்படுவதில்லை, செயல்களால் அறியப்படுகிறான், மேலும் அவன் நாட்டிற்கு எவ்வளவு செய்கிறானோ, அவ்வளவு பெரியவன்!" என்று தொடர்ந்த திரு மோடி, "அயோத்தியின் லதா மங்கேஷ்கர் சதுக்கம் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைத்து நினைவுகளும் நாட்டின் மீதான கடமை உணர்வை உணர்த்த உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்குப் பிறகு சகோதரி லதாவிடம் இருந்து தமக்கு அழைப்பு வந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இறுதியாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சகோதரி லதா மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறினார். சகோதரி லதா பாடிய ‘மன் கி அயோத்தி தாப் தக் சூனி, ஜப் தக் ராம் நா ஆயே’ என்ற பாடலை நினைவு கூர்ந்த பிரதமர், அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீ ராமர் உடனடியாக காட்சி கொடுத்தது  போல் இருந்தது என்று குறிப்பிட்டார். கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் ராமரை நிறுவிய சகோதரி லதாவின் பெயர் தற்போது புனித நகரமான அயோத்தியுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ராம் சரித் மானஸை மேற்கோள் காட்டிய பிரதமர் “ராம் தே ஆதிக், ராம் கர் தாசா” என்று பாடினார். அதாவது ராமரின் பக்தர்கள் கடவுளின் வருகைக்கு முன்பே வந்துவிடுவார்கள். எனவே, அவரது நினைவாக கட்டப்பட்ட லதா மங்கேஷ்கர் சதுக்கம், பிரமாண்ட கோவில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது.

அயோத்தியின் பெருமைமிக்க பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்துவதையும், நகரத்தில் வளர்ச்சியின் புதிய விடியலையும் எடுத்துரைத்த பிரதமர், பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளம் என்றும், நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம் , கடமை ஆகியவற்றின் வாழும் லட்சியமாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். "அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும்  ராமர் இடம்பெற்றுள்ளார்" என்று மோடி மேலும் கூறினார். ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதைக் கண்டு நாடு பரவசமடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

லதா மங்கேஷ்கர் சதுக்க இடம் அயோத்தியில் உள்ள பல்வேறு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கும் முக்கிய தளங்களில் ஒன்றாகும் என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சதுக்கம் ராம் கி பைடிக்கு அருகிலும், சரயு புனித நதிக்கு அருகிலும் உள்ளது. "சகோதரி லதாவின் பெயரில் ஒரு சதுக்கத்தை கட்ட இதைவிட, சிறந்த இடம் எது?", என்று பிரதமர் ஆச்சரியப்பட்டார். பல யுகங்களுக்குப் பிறகு அயோத்தி, ராமரைப் பெற்ற விதம் குறித்து கற்பனையோடு கூறிய பிரதமர், சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் கடவுள் ராமரில் மூழ்கியதாக கூறினார்.

அது மானஸ் மந்திரமான 'ஸ்ரீ ராமச்சந்திர கிருபாலு பஜ் மன், ஹரன் பவ பய தருணம்' அல்லது மீராபாயின் 'பயோ ஜி மைனே ராம் ரத்தன் தன் பயோ' போன்ற கீர்த்தனைகளாக இருக்கலாம்; பாபுவுக்குப் பிடித்த ‘வைஷ்ணவ் ஜான்’ ஆகட்டும், அல்லது ‘தும் ஆஷா விஸ்வாஸ் ஹமாரே ராம்’ போன்ற இனிய மெல்லிசைப் பாடல்களாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தாலும், லதாவின் பாடல்கள் மூலம் பல நாட்டு மக்கள் ராமரை உணர்ந்திருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். "சகோதரி லதாவின் தெய்வீகக் குரல் மூலம் கடவுள் ராமரை உணர்ந்தோம் " என்று திரு மோடி  மேலும் கூறினார்.

சகோதரி லதாவின் குரலில் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை கேட்கும்போது, ​​பாரத அன்னையின் பரந்த வடிவம் நம் கண்முன் தோன்றத் தொடங்குகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், “சகோதரி லதாவின் குடிமைப் பணிகளில் எப்போதும் மிகுந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பது போலவே, அயோத்தியில் வாழும் மக்களுக்கும், அயோத்திக்கு வரும் மக்களுக்கும் கடமையில் ஈடுபாடு காட்டுவதற்கு இந்த சதுக்கம் ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மேலும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த சதுக்கம், இந்த வீணை அயோத்தியின் வளர்ச்சியையும், அயோத்தியின் உத்வேகத்தையும் மேலும் எதிரொலிக்கும்"என்று கூறினார். சகோதரி லதாவின் பெயரிடப்பட்டுள்ள இந்த சதுக்கம், கலை உலகத்துடன் தொடர்புடைய மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக செயல்படும் என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். நவீனத்துவத்தை நோக்கி நகரும்போதும், அதன் வேர்களோடு இணைந்திருக்கும்போதும் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  எடுத்துச் செல்ல இது அனைவருக்கும் நினைவூட்டும் என்று தெரிவித்தார்.  "இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் கொண்டு செல்வது நமது கடமை" என்று திரு மோடி மேலும் கூறினார்.

தனது உரையில் நிறைவாகப் பேசிய பிரதமர், இந்தியாவின் ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இனி வரும் காலங்களில் இணைக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

लता जी, मां सरस्वती की एक ऐसी ही साधिका थीं, जिन्होंने पूरे विश्व को अपने दिव्य स्वरों से अभिभूत कर दिया: PM @narendramodi

— PMO India (@PMOIndia) September 28, 2022

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Biki choudhury November 01, 2022

    अस्पताल में जोस अछि तराह भरिए गा और किस तराह हूआ जाएजा ले । जय सोमनाथ की
  • Biki choudhury October 26, 2022

    इस से हम नीही रूक सकते कलाकार है उनो ने अपना काम किया है आप ने अपना लेकिन हमे अपना करना है ।
  • Biki choudhury October 11, 2022

    एक कलाकार को तो प्रजर्व तो कीआ
  • Mukesh Parmar October 10, 2022

    હું મુકેશ પરમાર અમદાવાદ ગુજરાતનો રહેવાસી મારે આવાસ યોજનામાં મકાન લાગેલું છે પણ મને ફાળવ્યું નથી મારો નંબર 96 62681664
  • Pawan jatasara September 30, 2022

    जय मां ता दी
  • RSS SRS SwayamSewak September 30, 2022

    शेर कैसे बना मां दुर्गा का वाहन: तेज, शक्ति और सामर्थ्‍य मां दुर्गा का प्रतीक हैं और उनकी सवारी शेर प्रतीक है आक्रामकता और शौर्य का. आइए जानते हैं कि क्‍यों शेर मां दुर्गा का वाहन है और क्‍या है इसके पीछे की कथा? मां पार्वती का शिकार करने आया शेर एक बार देवी पार्वती घोर तपस्या में लीन थीं. उस दौरान वहां एक भूखा शेर देवी का शिकार करने के लिए वहां पहुंचा, लेकिन मां पार्वती तपस्या में इतनी डूबी थीं कि शेर काफी समय तक भूखे-प्यासे देवी पार्वती को चुपचाप निरंतर देखता रहा. देवी पार्वती को देखते-देखते शेर ने सोचा कि जब वो तपस्या से उठेंगी, तो वो उनको अपना आहार बना लेगा. लेकिन ऐसा नहीं हो सका. सालों तक भूखा बैठा रहा शेर माता के प्रभाव के चलते वह शेर भी तपस्या कर रही मां के साथ वहीं सालों चुपचाप बैठा रहा. देवी पार्वती की तपस्या जब पूर्ण हुई तो भगवान शिव प्रकट हुए और मां पार्वती को गौरवर्ण यानी मां गौरी होने का वरदान दिया. तभी से मां पार्वती महागौरी कहलाने लगीं. इसके बाद मां ने देखा कि शेर भी उनकी तपस्या के दौरान सालों तक भूखा-प्यास बैठा रहा. शेर को मिला मां दुर्गा की सवारी का वरदान शेर के इस प्रयास से मां प्रसन्न हुईं. उन्होंने सोचा कि शेर को भी उसकी तपस्या का फल मिलना चाहिए तो उन्होंने शेर को अपनी सवारी बना लिया. इस तरह से सिंह यानि शेर, मां दुर्गा का वाहन बना और मां दुर्गा का नाम शेरावाली पड़ा।।
  • Kushal shiyal September 30, 2022

    jay Shree ram
  • Sai. t. senthurmani September 30, 2022

    🙏🙏🙏🙏🙏
  • शिवानन्द राजभर September 30, 2022

    जय माता दी
  • JAI September 29, 2022

    शौर्यम् दक्षे युद्धम्, बलिदान परमो धर्म:” माननीय PM Narendra Modi जी ने 6 वर्ष पूर्व सर्जिकल स्ट्राइक कर बता दिया कि ये नया भारत है, शत्रु को मुंहतोड़ जवाब देने की शक्ति वाला नया अवतार ले चुका है। इस दृढ़निश्चय को साहस से सफल बनाने वाली भारतीय सेना का हार्दिक अभिनन्दन।
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 9, 2025
March 09, 2025

Appreciation for PM Modi’s Efforts Ensuring More Opportunities for All