Quote"டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்க பெங்களூரை விட சிறந்த இடம் இல்லை"
Quote"இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் கண்டுபிடிப்புகளில் அதன் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் விரைவான செயலாக்கத்திற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது"
Quote"நிர்வாகத்தை மாற்றுவதற்கும், அதை மிகவும் திறமையான, உள்ளடக்கிய, வேகமான மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும் தேசம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது"
Quote"இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலகளாவிய சவால்களுக்கு அளவிடக்கூடிய, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகளை வழங்குகிறது"
Quote"இத்தகைய பன்முகத்தன்மையுடன், தீர்வுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த ஆய்வகமாகும். இந்தியாவில் வெற்றிபெறும் தீர்வை உலகின் எந்த மூலையிலும் எளிதாகப் பயன்படுத்தலாம்.
Quote"பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்வான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஜி 20 உயர் மட்டக் கொள்கைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது முக்கியம்"
Quote"மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளின் முழு சுற்றுச்சூழல் அம

பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் உணர்வின் தாயகமான பெங்களூரு நகரத்திற்கு பிரமுகர்களை வரவேற்றார், மேலும் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்க இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது என்று கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத டிஜிட்டல் மாற்றத்திற்கு காரணமாக 2015 ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் கண்டுபிடிப்புகளில் அதன் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் விரைவாக செயல்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் யாரும் பின்தங்காத உள்ளடக்க மனப்பான்மையால் உந்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த மாற்றத்தின் அளவு, வேகம் மற்றும் நோக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் 850 மில்லியன் இணைய பயனர்கள் உலகின் மலிவான தரவு செலவுகளை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். நிர்வாகத்தை மேலும் திறமையான, உள்ளடக்கிய, வேகமான மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள தளமான ஆதாரை எடுத்துக்காட்டாகக் கூறினார். ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் மற்றும் மொபைல் ஆகியவை நிதிச் சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்றும், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறும் யுபிஐ கட்டண முறை மற்றும் உலகளாவிய நிகழ்நேர பணம் பரிமாற்றங்களில் 45% இந்தியாவில் நிகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். கணினியில் உள்ள கசிவுகளை சரிசெய்து 33 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தும் நேரடி பயன் பரிமாற்றம் குறித்தும் பிரதமர் பேசினார்.  இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை ஆதரித்த கோவின் போர்ட்டலைக் குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய சான்றிதழ்களுடன் 2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்க இது உதவியது என்று தெரிவித்தார். உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களை வரைபடமாக்க தொழில்நுட்பம் மற்றும் இடம் சார்ந்த திட்டமிடலைப் பயன்படுத்தும் விரைவு -சக்தி தளத்தையும் திரு மோடி குறிப்பிட்டார், இது திட்டமிடல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் விநியோகத்தின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கொண்டு வந்த ஆன்லைன் பொது கொள்முதல் தளமான அரசாங்க மின்-சந்தை மற்றும் மின்னணு வணிகத்தை ஜனநாயகமயமாக்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் ஆகியவற்றை பிரதமர் மேலும் விளக்கினார். "முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மின் ஆளுமையை ஊக்குவிக்கின்றன", என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஆதரிக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியின் வளர்ச்சியையும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

"இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலகளாவிய சவால்களுக்கு அளவிடக்கூடிய, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகளை வழங்குகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் நம்பமுடியாத பன்முகத்தன்மையைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஏராளமான  மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன என்று கூறினார். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மதமும் எண்ணற்ற கலாச்சார நடைமுறைகளும் இங்கு உள்ளன என்று அவர் மேலும் கூறினார். "பண்டைய பாரம்பரியங்கள் முதல் சமீபத்திய தொழில்நுட்பங்கள் வரை, இந்தியா அனைவருக்கும் ஒன்றைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் தெரிவித்தார். இத்தகைய பன்முகத்தன்மையுடன், தீர்வுகளுக்கான சிறந்த சோதனை ஆய்வகமாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய அவர், இந்தியாவில் வெற்றிபெறும் ஒரு தீர்வை உலகின் எந்த மூலையிலும் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றார். இந்தியா தனது அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்பதை தெளிவுபடுத்திய பிரதமர், கோவிட் தொற்றுநோய்களின் போது உலகளாவிய நன்மைக்காக வழங்கப்படும் கோவின் தளத்தின் எடுத்துக்காட்டாக கூறினார். இந்தியா ஒரு ஆன்லைன் உலகளாவிய பொது டிஜிட்டல் பொருட்கள் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டிய ஆவர்,  இந்தியா ஸ்டாக் குறிப்பாக உலகளாவிய தெற்கிலிருந்து வந்தவர்கள் யாரும் பின்தங்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

பணிக்குழு ஜி 20 மெய்நிகர் உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சியத்தை உருவாக்குகிறது என்று திருப்தி தெரிவித்த பிரதமர், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கான பொதுவான கட்டமைப்பில் முன்னேற்றம் அனைவருக்கும் வெளிப்படையான, பொறுப்பான மற்றும் நியாயமான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்று தெரிவித்தார். நாடு கடந்த டிஜிட்டல் திறன்களை ஒப்பிடுவதற்கு வசதியாக ஒரு வரைபடத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளையும், டிஜிட்டல் திறன் குறித்த மெய்நிகர் சிறப்பு மையத்தை அமைப்பதற்கான முயற்சிகளையும் அவர் வரவேற்றார். எதிர்காலத்தில் தயாராக இருக்கும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியமான முயற்சிகள் இவை என்று அவர் கூறினார். டிஜிட்டல் பொருளாதாரம் உலகளவில் பரவுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்வான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஜி 20 உயர் மட்ட கொள்கைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.

"தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நம்மை இணைத்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உறுதிமொழியை இது கொண்டுள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர், அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் பாதுகாப்பான உலகளாவிய டிஜிட்டல் எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைக்க ஜி 20 நாடுகளுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது என்று வலியுறுத்தினார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவித்தல், உலகளாவிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை அவர் பரிந்துரைத்தார். மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க  தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளின் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்க முடியும் என்று திரு மோடி கூறினார். "நம்பிக்கை, அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய நான்கு சி-க்கள் மட்டுமே நம்மிடமிருந்து தேவை" என்று பிரதமர் முடித்தார், பணிக்குழு அந்த திசையில் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Click here to read full text speech

  • Mintu Kumar September 01, 2023

    नमस्कार सर, मैं कुलदीप पिता का नाम स्वर्गीय श्री शेरसिंह हरियाणा जिला महेंद्रगढ़ का रहने वाला हूं। मैं जून 2023 में मुम्बई बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर लिनेन (LILEN) में काम करने के लिए गया था। मेरी ज्वाइनिंग 19 को बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर हुई थी, मेरा काम ट्रेन में चदर और कंबल देने का था। वहां पर हमारे ग्रुप 10 लोग थे। वहां पर हमारे लिए रहने की भी कोई व्यवस्था नहीं थी, हम बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर ही प्लेटफार्म पर ही सोते थे। वहां पर मैं 8 हजार रूपए लेकर गया था। परंतु दोनों समय का खुद के पैसों से खाना पड़ता था इसलिए सभी पैसै खत्म हो गऍ और फिर मैं 19 जुलाई को बांद्रा टर्मिनस से घर पर आ गया। लेकिन मेरी सैलरी उन्होंने अभी तक नहीं दी है। जब मैं मेरी सैलरी के लिए उनको फोन करता हूं तो बोलते हैं 2 दिन बाद आयेगी 5 दिन बाद आयेगी। ऐसा बोलते हुए उनको दो महीने हो गए हैं। लेकिन मेरी सैलरी अभी तक नहीं दी गई है। मैंने वहां पर 19 जून से 19 जुलाई तक काम किया है। मेरे साथ में जो लोग थे मेरे ग्रुप के उन सभी की सैलरी आ गई है। जो मेरे से पहले छोड़ कर चले गए थे उनकी भी सैलरी आ गई है लेकिन मेरी सैलरी अभी तक नहीं आई है। सर घर में कमाने वाला सिर्फ मैं ही हूं मेरे मम्मी बीमार रहती है जैसे तैसे घर का खर्च चला रहा हूं। सर मैंने मेरे UAN नम्बर से EPFO की साइट पर अपनी डिटेल्स भी चैक की थी। वहां पर मेरी ज्वाइनिंग 1 जून से दिखा रखी है। सर आपसे निवेदन है कि मुझे मेरी सैलरी दिलवा दीजिए। सर मैं बहुत गरीब हूं। मेरे पास घर का खर्च चलाने के लिए भी पैसे नहीं हैं। वहां के accountant का नम्बर (8291027127) भी है मेरे पास लेकिन वह मेरी सैलरी नहीं भेज रहे हैं। वहां पर LILEN में कंपनी का नाम THARU AND SONS है। मैंने अपने सारे कागज - आधार कार्ड, पैन कार्ड, बैंक की कॉपी भी दी हुई है। सर 2 महीने हो गए हैं मेरी सैलरी अभी तक नहीं आई है। सर आपसे हाथ जोड़कर विनती है कि मुझे मेरी सैलरी दिलवा दीजिए आपकी बहुत मेहरबानी होगी नाम - कुलदीप पिता - स्वर्गीय श्री शेरसिंह तहसील - कनीना जिला - महेंद्रगढ़ राज्य - हरियाणा पिनकोड - 123027
  • Ambikesh Pandey August 25, 2023

    👍
  • Anuradha Sharma August 24, 2023

    Our great PM
  • Gopal Chodhary August 23, 2023

    जय जय भाजपा
  • mathankumar s. p. August 21, 2023

    bharadha madha ki jai
  • गोपाल बघेल जी किसान मोर्चा के मंडल August 21, 2023

    जय श्री कृष्ण राधे राधे मोदी जी राहुल गांधी के ऊपर देश द्रोहो धरा लगना चाहिए और तुरन्त जेल डाल देना चाहिए क्योंकि
  • Vunnava Lalitha August 21, 2023

    करो तैयारी हेट्रिक की तैयारी, मोदी है तो मुमकिन है के नारे घर घर पहुंचाओ।
  • Vijay Kumar Singh August 21, 2023

    Vijay Kumar singh nilkhanthpur mahua vaishali bihar pin code 844122 mo 7250947501 char bar mahua thana mein likhit aavedan dene ke bad bhi hamare sath abhi tak koi naya nahin mila FIR Vaishali SP sahab ke yahan Janata Darbar mein char bar likhit aavedan diye online ke madhyam se lok shikayat nivaaran Kendra char bar likhita char bar likhita aavedan dene ke bad bhi hamare sath abhi tak koi naya nahin mila
  • prashanth simha August 20, 2023

    Looks like China is the worst enemy for India… don’t support BRICS 👎
  • prashanth simha August 20, 2023

    Global reset with Brics currency or West’s digital currency is the same… India should do what is the best for India 🇮🇳
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s fruit exports expand into western markets with GI tags driving growth

Media Coverage

India’s fruit exports expand into western markets with GI tags driving growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan: Prime Minister
February 21, 2025

Appreciating the address of Prime Minister of Bhutan, H.E. Tshering Tobgay at SOUL Leadership Conclave in New Delhi, Shri Modi said that we remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.

The Prime Minister posted on X;

“Pleasure to once again meet my friend PM Tshering Tobgay. Appreciate his address at the Leadership Conclave @LeadWithSOUL. We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.

@tsheringtobgay”