2020, மே 20 அன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேரடியாக நடைபெற்ற மூன்றாவது குவாட் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூரியே கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி பற்றிய ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை இந்தத் தலைவர்கள் மேற்கொண்டனர். இது இவர்களின் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் உத்திகள் வகுத்தல் ஆர்வத்தை உறுதிசெய்தது. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா-பசிஃபிக் என்ற தங்களின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்ட, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு என்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் பின்னணியில் இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்திற்கான நீடித்த பங்குதாரர்கள் என்ற குவாட் தலைவர்களின் கண்ணோட்ட அறிக்கையை இவர்கள் வெளியிட்டனர். இது இவர்களின் கொள்கைசார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்தியது.
இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்தின் உறுதியையும் வளத்தையும் வலுப்படுத்த சில முன்முயற்சித் திட்டங்களை தலைவர்கள் வெளியிட்டனர்.
தூய எரிசக்தி வழங்கல் தொடர், குவாட் அடிப்படைக் கட்டமைப்பு ஆய்வுத் திட்டம், கேபிள் இணைப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான பங்களிப்பு, பாலாவில் சிறு அளவிலான ஓரான் அமைப்புக்கு குவாட் ஆதரவு போன்றவை இதில் அடங்கும்.
இந்தப் பின்னணியில் 2024ல் அடுத்த குவாட் உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு வருகைதருமாறு குவாட் தலைவர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.