Quote"சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார்"
Quote"இந்த நிலத்தில் வாழும் 130 கோடி இந்தியரும் நமது ஆன்மா, கனவுகள், பெருவிருப்பங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றனர்"
Quote"வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய, உணர்வுபூர்வமான, விழிப்பான இந்தியாவை சர்தார் படேல் விரும்பினார்"
Quote"சர்தார் படேலால் ஈர்க்கப்பட்ட இந்தியா, உள்ளேயிருக்கிற, வெளியேயுள்ள சவால்களைச் சந்திக்கும் திறனுள்ளதாக மாறியிருக்கிறது"
Quote"நீர், நிலம், வானம் மற்றும் விண்வெளியில் நாட்டின் உறுதியும் திறன்களும் முன்னெப்போதும் காணப்படாதவை; தற்சார்பு இந்தியா இயக்கத்தின் புதிய பாதையில் நாடு முன்னேறத் தொடங்கியிருக்கிறது"
Quote"முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் படேல் கனவுகண்ட இந்தியாவைக் கட்டமைப்பது ஆகியவை 'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு சகாப்தமாக' உள்ளது"
Quote"அரசுடன் மக்களின் 'விரைவு சக்தியும்' இணைந்து செயல்பட்டால் அசாத்தியம் என்பது எதுவுமில்லை"

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ சிந்தனைக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் படேலுக்கு அவர் சிறப்புமிக்க அஞ்சலி செலுத்தினார். சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார் என்றும் ஒற்றுமை என்ற செய்தியை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் சிதைவுபடாத ஒற்றுமை உணர்வின் உன்மையான அடையாளமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.  நாட்டின் மூலை முடுக்குகளிலும் தேசிய ஒருமைப்பாட்டு விழா நடப்பதும், ஒற்றுமை சிலை அருகே நிகழ்வுகள் நடப்பதும் இதே உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். புவிசார்ந்த நிலையில் மட்டும் இந்தியா ஒன்றாக இல்லை என்றும் சிந்தனைகள், சித்தாந்தங்கள், நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றில் பொதுவான நிலைகளையும் நாடு கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “130 கோடி இந்தியர்கள் வாழும் இந்த பூமி நமது ஆன்மா, கனவுகள், பெருவிருப்பங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

ஒரே இந்தியா என்ற உணர்வால் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய பிரதமர் நாட்டின் இலக்குகளை எய்துவதற்கான திசையில் ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் கூட்டாண முயற்சிக்கு அழைப்புவிடுத்தார்.  வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய, உணர்வுபூர்வமான, விழிப்புள்ள இந்தியாவை சர்தார் படேல் விரும்பினார் என்பதைப் பிரதமர் வலியுறுத்திக் கூறினார். இந்தியா நல்லுறவைக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது. “சர்தார் படேலால் ஊக்கம்பெற்றுள்ள இந்தியா, உள்ளேயிருந்து மற்றும் வெளியேயிருந்து வரும் சவால்களை சந்திக்கும் முழுமையான திறன் பெற்றதாக மாறியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

|

கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர் தேவையற்ற சட்டங்களை நாடு ரத்துசெய்துள்ளது. ஒற்றுமையின் சிந்தனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத் தொடர்பையும் அடிப்படைக் கட்டமைப்பையும் அதிகப்படுத்தியிருப்பதால் புவியியல் ரீதியான, கலாச்சார ரீதியிலான தூரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“இன்று ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற உணர்வு வலுவடைந்திருப்பதால் சமூக, பொருளாதார, அரசியல் சட்டப்படியான ஒருங்கிணைப்பின் ‘மகா யாகம் நடந்துகொண்டிருக்கிறது’ என்றும் நீர், நிலம், வான், வின்வெளி ஆகியவற்றில் நாட்டின் உறுதியும் திறனும் முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது என்றும் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் புதிய பாதையில் தேசம் முன்னோக்கி செல்லத்தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். சுதந்திரத்தின் 75வது ஆண்டு சகாப்தத்தில் ‘அனைவரின் முயற்சி’ என்பது கூடுதல் பொருத்தமுடியதாக இருக்கிறது என்பதை அவர் வளியுறுத்தினார். முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் சாகேபின் கனவுகள்படி இந்தியாவைக் கட்டமைப்பது என்பதன் சகாப்தமாக சுதந்திரத்தின் 75வது ஆண்டு உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

சர்தார் படேலின் ஒரே இந்தியா என்பதன் பொருள் அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பதாகும் என்று பிரதமர் கூறினார். இந்தக் கோட்பாட்டை விவரித்த பிரதமர் ஒரே இந்தியா என்பது பெண்கள், தலித் மக்கள், நலிவடைந்தவர்கள், பழங்குடியினர், வனவாசிகள் ஆகியோருக்கு சம வாய்ப்புகள் அளிக்கும் இந்தியா என்றார். எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைவருக்கும் வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை எளிதில் கிடைக்கச்செய்வதாகும் ‘அனைவரும் முயற்சி செய்வோம்’ என்பதில் இதைத்தான் நாடு செய்துவருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

|

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘அனைவரும் முயற்சி செய்வோம்’ என்ற சக்தியை வலியுறுத்தி எடுத்துரைத்த பிரதமர், புதிய கொவிட் மருத்துவமனைகள், அத்தியாவசிய மருந்துகள், 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் ஆகியவற்றை எல்லாம் ஒவ்வொரு குடிமகனின் கூட்டான முயற்சிகள் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது என்றார்.

அரசுத் துறைகளின் கூட்டான சக்தியை பயன்படுத்துவதற்குப் பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டதை நினைவூட்டிய பிரதமர் அரசுடன் மக்களின் ‘விரைவு சக்தி’ இணைந்தால் அசாத்தியம் என்பது எதுவும் இல்லை என கூறினார். எனவே நமது ஒவ்வொருவரின் செயலும் விரிவான தேசிய இலக்குகளை கருத்தில்கொண்டதாக இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மாணவர்கள் தங்களின் படிப்பு அல்லது பொருட்கள் வாங்க செல்லுமிடத்தைத் தெரிவுசெய்யும்போதே குறிப்பிட்ட துறையின் புதிய கண்டுபிடிப்புகளையும் அவர்கள் செய்யமுடிந்துள்ளது என்ற உதாரணத்தை அவர் கூறினார். மக்கள் தங்களின் சொந்த விருப்பங்களுடன் தற்சார்பு இந்தியாவின் இலக்கையும் மனதில் கொள்ளவேண்டும். அதே போல் தொழில்துறையினர், விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்களும் தங்கள் தெரிவுகளின்போது நாடு நிர்ணயித்துள்ள இலக்குகளையும் மனதில்கொள்ளவேண்டும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் உதாரணத்தை எடுத்துரைத்த பிரதமர் நாட்டின் பலத்தில் மக்களின் பங்கேற்பை அரசு உருவாக்கியுள்ளது என்றார். ஒரே இந்தியா  என்பதை முன்னெடுக்கும்போதெல்லாம் நாம் வெற்றிபெறுகிறோம் என்றும் இது உன்னத இந்தியா என்பதற்கும் பங்களிப்பு செய்கிறது என்றும் கூறி உரையை அவர் நிறைவுசெய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • MANDA SRINIVAS March 07, 2024

    jaisriram
  • Pushkar Mishra Dinanath March 06, 2024

    Bharat Mata ki Jai 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🌺🔥🔥🌺🌺
  • Pushkar Mishra Dinanath March 06, 2024

    Bharat Mata ki Jai 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🌺🔥🔥🌺🌺
  • Mahendra singh Solanki Loksabha Sansad Dewas Shajapur mp December 11, 2023

    नमो नमो नमो नमो नमो नमो नमो नमो
  • SHRI NIVAS MISHRA January 21, 2022

    हर यादव की पोस्ट पर आया करो मित्रो..! ताकि उसे ऐसा न लगे कि वो अकेला है, हम उसका साथ देंगे तभी वो हमारा साथ देगा 🚩🙏 जय भाजपा, विजय भाजपा 🌹🌹
  • G.shankar Srivastav January 03, 2022

    नमो
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Rs 1,555 crore central aid for 5 states hit by calamities in 2024 gets government nod

Media Coverage

Rs 1,555 crore central aid for 5 states hit by calamities in 2024 gets government nod
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2025
February 19, 2025

Appreciation for PM Modi's Efforts in Strengthening Economic Ties with Qatar and Beyond