“A confluence of startups and sports is significant. Khelo India University Games in Bengaluru will add to the energy of this beautiful city”
“Organization of the Games amidst the challenges of the pandemic epitomizes the determination and passion of New India. This youthful passion is driving India in every field with new momentum”
“Holistic approach and 100 percent dedication are the key requirements of success in sports and life”
“Wearing the victory well and learning from defeat is an important art that we learn in the sports field”
“Many initiatives are freeing the sports from the shackles of old mode of thinking”
“Recognition in sports adds to the recognition for the country”

வணக்கம்!

கேலோ இந்தியா  பல்கலைக்கழக விளையாட்டுக்களுக்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

நாட்டின் இளமையான ஆர்வத்தின் அடையாளமாகவும், தொழில்முறை பணியாளர்களின் பெருமிதமாகவும், பெங்களூரு விளங்குகிறது.  டிஜிட்டல் இந்தியாவின் மையமான பெங்களூரு  கேலோ இந்தியாவை ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புதிய தொழில்கள் தொடக்கமும். விளையாட்டுப் போட்டிகள் தொடக்கமும் இங்கு ஒரே நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் பெங்களூருவில் நடத்தப்படுவது இந்த அழகிய நகரின் சக்தியை அதிகப்படுத்துவதாகும். இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த கர்நாடக அரசை நான் பாராட்டுகிறேன். உலகளாவிய பெருந்தொற்றின் சவால்களுக்கு இடையே இந்த விளையாட்டுப் போட்டி மனஉறுதி மற்றும் இந்திய இளைஞர்களின் உணர்வுக்கு உதாரணமாக இருக்கிறது. உங்களின் முயற்சிகளுக்கும், துணிவுக்கும் நான் வணக்கம் தெரிவிக்கிறேன்.

 

 

எனது இளம் நண்பர்களே!

வெற்றியின் முதலாவது மந்திரம் குழு உணர்வாகும். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்களில்  இதனை  நீங்கள் அனுபவமாக கொள்ளலாம். இந்த உணர்வு வாழ்க்கை முறையை காண்பதற்கு புதிய வழியையும் காட்டுகிறது.

விளையாட்டில் வெற்றி என்பது முழுமையான அணுகுமுறை 100 சதவீத அர்ப்பணிப்பு என பொருள்படும்!

உங்களில் பலர் வீரர்கள் எதிர்காலத்தில் மாநில அளவில் விளையாடலாம். மேலும் பலர் சர்வதேச அளவில் இந்த நாட்டை  பிரதிநிதித்துவம் செய்யலாம். உங்களில் விளையாட்டுத்துறை அனுபவம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு உதவி செய்யும். திறனும். அறிவும் உங்களை விளையாட்டில் முன்னோக்கி செலுத்துவதைப் போல வாழ்க்கையிலும் முன்னோக்கி செலுத்தும். ஆர்வம், சவால்கள், தோல்வியிலிருந்து பாடம் கற்றல், நேர்மை, வாழ்வதற்கான திறமை போன்றவை விளையாட்டுகளுக்கும், வாழ்க்கைக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளாகும்.

நண்பர்களே!

நீங்கள்  புதிய இந்தியாவின் இளைஞர்கள். உங்களின் இளமையான சிந்தனையும், உங்களின் இளமையான அணுகுமுறையும் தேசத்தின் கொள்கைகளை இன்று முடிவு செய்கின்றன.  புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டுகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கட்டும் அல்லது  நவீன  விளையாட்டு கட்டமைப்பை உருவாக்குவதாக இருக்கட்டும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையாகட்டும், விளையாட்டுக்களில் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பதாக இருக்கட்டும். இவை எல்லாம் புதிய இந்தியாவின்  முத்திரைகளாகும்.

நண்பர்களே!

விளையாட்டுக்களின் ஆற்றல் நாட்டின் ஆற்றலை விரிவுபடுத்துகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து திரும்பி வந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை நான்  சந்தித்தது இன்னமும் எனது நினைவில் இருக்கிறது. தங்களி்ன் சொந்த வெற்றியைவிட நாட்டுக்கான வெற்றியில்.பெருமிதம் கொண்டதை  அவர்களின் முகங்கள் பிரதிபலித்தன.

இந்த உணர்வு உங்களை முன்னேற்றும். இந்த உணர்வு இந்தத் துறையின் வெற்றிக்கு உதவுவது மட்டுமின்றி உங்களுக்கு  பதக்கத்தையும் பெற்றுத்தரும். இந்த நம்பிக்கையோடு நாடு முழுவதிலிமிருந்து வந்துள்ள எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன்..

உங்களுக்கு நன்றி !!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"