பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது செனகல் அதிபர் திரு. மேக்கி சால்-ஐ சந்தித்தார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, சுரங்கம், விவசாயம், மருந்துகள், ரயில்வே, திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.
உலகளாவிய தெற்கின் குரல் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்க யூனியனுக்கு அவர் அளித்த வலுவான தலைமைக்காகவும் அதிபர் சாலுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
சந்திரயான் வெற்றிக்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் சால், ஜி20-ல் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நிரந்தர உறுப்புரிமைக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். வளரும் நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதில் பிரதமரின் தலைமையை பாராட்டிய அவர், இந்தியாவின் தலைமையில் வரவிருக்கும் ஜி20 உச்சிமாநாடு வெற்றியடைய தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Held talks with President @Macky_Sall in Johannesburg. India considers Senegal to be a valued developmental partner. We discussed sectors like energy, infrastructure, defence and more in our meeting. pic.twitter.com/keoZjjnjZg
— Narendra Modi (@narendramodi) August 24, 2023