பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 24, 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது மொசாம்பிக் குடியரசு அதிபர் மேதகு திரு பிலிப்பைன்ஸ் ஜாசிண்டோ நியுசியை சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற தொடர்புகள், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, சுரங்கம், சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, திறன் மேம்பாடு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினர்.
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் அதிபர் திரு நியுசி பங்கேற்றதை பிரதமர் பாராட்டினார்.
சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்காக அதிபர் திரு நியுசி, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியையும் பாராட்டினார்.
Met President Filipe Nyusi on the sidelines of the BRICS Summit in Johannesburg. We discussed ways to diversify India-Mozambique cooperation across various sectors for the benefit of the people of our nations. pic.twitter.com/EP6V6XVwhm
— Narendra Modi (@narendramodi) August 24, 2023