பிரதமர் திரு. நரேந்திர மோடி 14 ஜூலை 2023 அன்று பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இம்மானுவேல் மேக்ரானுடன் ஆலோசனை மற்றும் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இருதரப்பு ராணுவம் மற்றும் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு, விண்வெளி, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு உள்பட பரந்த அளவில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம், இந்தோ-பசிபிக் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளின் பரஸ்பர நலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
"ஹொரைசன் 2047: இந்தியா-ஃபிரான்ஸ் உத்திகள் கூட்டுறவின் எதிர்காலத்தை திட்டமிடுதல்" உள்ளிட்ட எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செப்டம்பர் 2023-ல் நடைபெறும் ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு புதுதில்லியில் அதிபர் மேக்ரானை வரவேற்க ஆவலாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.