இந்தியாவில் செப்டம்பர் 13 முதல் 15,2022 வரை பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் வெளியுறவு விவகார அமைச்சர் திருமதி கேத்ரின் கலோனா இன்று பிரதமர் திரு மோடியை சந்தித்து பேசினார். இருதரப்பு மற்றும் பரஸ்பரம் நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக்கிடையே, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்த அதிபர் திரு மேக்ரோனின் தகவலை அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார். அப்போது பாரீசிலும், ஜெர்மனியின் ஸ்கால்ஸ் எல்மாவிலும் அதிபர் திரு மேக்ரோனை அண்மையில் சந்தித்து பேசியது குறித்து பிரதமர் திரு மோடி நினைவு கூர்ந்தார். வாய்ப்பிருந்தால் இந்தியா வருகை தரும் அதிபரை வரவேற்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.