சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான மேதகு திரு. லீ சியன் லூங்கை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பிரதமரை கவுரவிக்கும் வகையில் மூத்த அமைச்சர் மதிய விருந்து அளித்தார்.
இந்தியா-சிங்கப்பூர் உத்திசார் கூட்டாண்மை வளர்ச்சிக்கு மூத்த அமைச்சர் லீயின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், மூத்த அமைச்சர் என்ற தனது புதிய பொறுப்பில் இந்தியாவுடனான சிங்கப்பூரின் உறவுகள் குறித்து மூத்த அமைச்சர் லீ தொடர்ந்து கவனம் செலுத்த வழிகாட்டுவார். என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தங்களது முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்த பிரதமரும் மூத்த அமைச்சர் லீயும், இந்தியா-சிங்கப்பூர் உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மையாக முன்னேறி வருவது குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேஜை மாநாட்டின் போது அடையாளம் காணப்பட்ட ஒத்துழைப்பு அடிப்படையின் கீழ், மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
It is always gladdening to meet my friend and former PM of Singapore, Mr. Lee Hsien Loong. He has always been a strong votary of close India-Singapore ties. His insights on various matters are also very enriching. We had a great discussion on how our nations can work together in… pic.twitter.com/ZxomD6F0Bo
— Narendra Modi (@narendramodi) September 5, 2024