டோக்கியோ-வில் சாஃப்ட்பேங்க் குழுமத்தின் வாரிய இயக்குநரும், நிறுவனருமான மசாயோஷி சன்னை பிரதமர் திரு.நரேந்திர மோடி, மே 23, 2022-ல் சந்தித்துப் பேசினார். இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் சாஃப்ட்பேங்க்-கின் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் நிதி போன்ற முக்கிய துறைகளில் சாஃப்ட்பேங்க்-கின் எதிர்கால பங்களிப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவில் சாஃப்ட்பேங்க்-கின் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலான குறிப்பிடத்தகுந்த திட்டங்கள் குறித்து இருவரும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
In Tokyo, PM @narendramodi interacted with Founder @SoftBank_Group, Mr. Masayoshi Son. The subjects discussed include India's strides in the world of StartUps, opportunities in research, technology and ways to boost investment linkages. pic.twitter.com/dqvGTUn7Hj
— PMO India (@PMOIndia) May 23, 2022