பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பானின் டோக்கியோவில் 24 மே 2022 அன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள் திரு யோஷிரோ மோரி மற்றும் திரு ஷின்ஷோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். திரு யோஷிரோ மோரி, ஜப்பான் – இந்தியா சங்கத்தின் (JIA) தற்போதைய தலைவராக உள்ள நிலையில், திரு ஷின்ஷோ அபே, இந்தப் பொறுப்பை விரைவில் ஏற்க உள்ளார். 1903ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜப்பான் – இந்தியா சங்கம், ஜப்பானில் உள்ள மிகவும் பழமையான நட்புறவு சங்கங்களில் ஒன்றாகும்.
இந்தியா – ஜப்பான் இடையே அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதில் திரு யோஷிரோ மோரியின் தலைமையின் கீழ், ஜப்பான் – இந்தியா சங்கம் அளப்பறிய பங்காற்றியிருப்பதாக பிரதமர், பாராட்டுத் தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பேற்க உள்ள திரு ஷின்ஷோ அபே-வுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், ஜப்பான் – இந்தியா சங்கம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியா – ஜப்பான் சிறப்புமிக்க நீடித்த மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக் குறித்து விரிவாக விவாதித்த தலைவர்கள், அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமான இந்தோ - பசிபிக் குறித்த இந்தியா - ஜப்பான் தொலைநோக்கு சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர். இருநாட்டு மக்களிடையேயான நேரடி தொடர்புகள் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Met former PMs @AbeShinzo and Yoshiro Mori. We had wonderful discussions on various topics. The Japan-India association is playing a commendable role in boosting ties between our nations. pic.twitter.com/sBcNTOPguP
— Narendra Modi (@narendramodi) May 24, 2022