பிரதமர் திரு.நரேந்திர மோடி 2023 ஜூலை 15-ம் தேதியன்று CoP28-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரும், அபுதாபியில் உள்ள அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் சுல்தான் அல் ஜாபரை சந்தித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள COP-28 என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற 28-வது மாநாடு குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுகுமுறை குறித்து டாக்டர் ஜாபர் பிரதமருக்கு விளக்கினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் தெரிவித்தார். சர்வதேச சூரிய மின்சாரக் கூட்டணி, பேரிடர்களை தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சர்வதேச சிறுதானிய ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Life) உள்பட காலநிலை மாற்றத்தை தடுப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஆற்றல் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.