அமெரிக்கா–இந்தியா 2020 உச்சிமாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பு(USISPF) இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக செயலாற்றும் லாப நோக்கில்லா அமைப்பு.
ஆகஸ்ட் -31ம் தேதி தொடங்கிய 5 நாள் மாநாட்டின் முக்கிய கருத்து ‘‘புதிய சவால்களுக்கு அமெரிக்கா–இந்தியா வழிகாட்டுகிறது’’.
இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு. நரேந்திர மோடி, கொரோனா பெருந்தொற்று நமது மீட்புத்திறன், சுகாதாரம், பொருளாதார அமைப்புகளை பாதித்து விட்டது எனக் கூறினார்.
தற்போதைய சூழலுக்கு, புதிய மனநிலை தேவைப்படுகிறது. மக்கள் மையமான வளர்ச்சி அணுகுமுறைதான் அந்த மனநிலை. இதற்கு அனைவரிடமும் ஒத்துழைப்பு உணர்வு வேண்டும் என அவர் கூறினார்.
நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய வழி குறித்து பேசிய பிரதமர், திறனை மேம்படுத்துவதிலும், ஏழைகளைப் பாதுகாப்பதிலும், மக்களின் எதிர்காலத்தை சரிபார்ப்பதிலும் நாடு கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கொரோனாவை எதிர்த்துப் போராடும் வசதிகளை அதிகப்படுத்தவும் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இறப்பு வீதம், உலகளவில் குறைவாக இருப்பதை உறுதி செய்தது என்றார்.
இந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக, சிறு தொழில் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆரம்பத்தில், பிபிஇ கவச உடைகள் தயாரிப்பு இந்தியாவில் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது, பிபிஇ உடைகள் தயாரிப்பில் உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என அவர் கூறினார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களால், கொரோனா தொற்றால், 1.3 பில்லியன் இந்தியர்களிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், வர்த்தகத்தை எளிதாக்கி பாதிப்பைக் குறைத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய வீட்டு வசதி திட்டப்பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து இணைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை உருவாக்க, தனிச்சிறப்பான டிஜிட்டல் மாதிரி உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கோடிக்கணக்கான மக்களுக்கு வங்கி சேவை, கடன், டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதில் சிறந்த நிதி தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
உலகளாவிய பொருட்கள் விநியோகத்தை மேம்படுத்தும் முடிவு விலை அடிப்படையில் இருக்கக் கூடாது, நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை கொரோனா பெருந்தொற்று உலகுக்கு காட்டியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். மலிவான விலையில் இடம் கிடைப்பதுடன், நம்பகத்தன்மை மற்றும் அரசியல் நிலைத்தன்மையை தொழில் நிறுவனங்கள் தற்போது எதிர்பார்ப்பதாகவும், இத்தகைய தன்மைகளுடன் இந்தியா இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, அன்னிய முதலீடுகளுக்கு சாதகமான நாடாக, இந்தியா உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா அல்லது வளைகுடா நாடுகள் உட்பட உலக நாடுகள் இந்தியாவை நம்புகிறது என அவர் கூறினார். இந்த ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட முதலீட்டை இந்தியா பெற்றுள்ளதாக அவர் கூறினார். கூகுள், அமேசான் மற்றும் முபாதாலா முதலீட்டு நிறுவனம் ஆகியவை இந்தியாவுக்கு நீண்ட கால திட்டங்களை அறிவித்துள்ளன.
வெளிப்படைத்தன்மை குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள வரிமுறை, நேர்மையான வரி செலுத்துவோருக்கு ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்து செயல்படும் மறைமுக வரிமுறை என அவர் கூறினார்.
திவால் மற்றும் நொடிப்பு நிலை விதிமுறைகள் ஒட்டுமொத்த நிதி அமைப்பின் அபாயத்தைக் குறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விரிவான தொழிலாளர் நலன் சீர்திருத்தம், வேலை அளிப்போரின் சுமையை குறைப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை அளிப்பதாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியை அதிகரிக்க முதலீட்டின் முக்கியத்துவம் குறித்தும், தேவை மற்றும் விநியோகத்தை இந்தியா எப்படி சமாளிக்கிறது என்பது பற்றியும் பிரதமர் ஆலோசித்தார்.
உலகிலேயே வரி குறைவாக இருக்கும் நாடு இந்தியா என்றும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகளை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வருமான வரியில், முகமில்லா மதிப்பீடு அடிப்படையிலான தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பங்கு பத்திர துறையில் தொடர்ச்சியாக சீர்திருத்தம் செய்யப்படுவது, முதலீட்டாளர்களின் எளிதான அணுகுமுறையை மேம்படுத்துவதை உறுதி செய்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில், உலகளாவிலய அன்னிய முதலீடு 1 சதவீதம் குறைந்த போது, இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு, 20 சதவீதம் அதிகரித்தது என்றும், இது இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டு நிர்வாகத்தின் வெற்றியைக் காட்டுகிறது என அவர் கூறினார்.
மேலே கூறிய நடவடிக்கைகள் அனைத்தும், வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறினார். அவை வலுவான உலக பொருளாதாரத்துக்கு தனது பங்களிப்பை அளிக்கும்.
தற்சார்பு இந்தியா திட்டம், உள்நாட்டு தயாரிப்பை, சர்வதேசத்துடன் இணைப்பதாகவும், இந்தியாவின் வலிமைகள், உலக சக்தியை பல மடங்கு பெருக்குவதாகவும் பிரதமர் கூறினார்.
உலக வர்த்தக அரங்கில், இந்தியாவை தீவிர உற்பத்தி நாடாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும், நிலக்கரி மற்றும் சுரங்கம், ரயில்வே, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகள் தனியார் துறை முதலீட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ சாதனங்கள், மருந்து துறைகள் மற்றும் வேளாண்துறையில் சலுகைகளுடன் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள சவால்கள் பற்றி பேசிய பிரதமர், முடிவுகளை வெளியிடுவதில் நம்பிக்கையுள்ள அரசு, வாழ்க்கையையும், தொழில் செய்வதையும் எளிதாக்கும் அரசு இருப்பதாகக் குறிப்பி்டார்.
மக்கள் தொகையில் 65% பேர், 35 வயதுக்கு கீழ் உள்ள இளம் நாடாக இந்தியா இருப்பதாகவும், அவர்கள் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். இந்தியா அரசியல் நிலைத்தன்மையுடன் கூடிய நாடு என்றும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் காக்க உறுதி பூண்டுள்ள நாடு என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
Laudatory efforts by @USISPForum to deepen India-USA ties. #USIndiasummit2020 pic.twitter.com/rzfWQZNRRC
— PMO India (@PMOIndia) September 3, 2020
Furthering a human centric approach to development. #USIndiasummit2020 pic.twitter.com/Yr1mZXULEJ
— PMO India (@PMOIndia) September 3, 2020
Ramping up our capacities.
— PMO India (@PMOIndia) September 3, 2020
Helping the poor. #USIndiasummit2020 pic.twitter.com/PV5S9359K7
A continued focus on wearing masks and social distancing. #USIndiasummit2020 pic.twitter.com/hP40Tnqp67
— PMO India (@PMOIndia) September 3, 2020
Providing support to 800 million Indians during the time of the pandemic. #USIndiasummit2020 pic.twitter.com/At3Uee3pBq
— PMO India (@PMOIndia) September 3, 2020
India’s reform trajectory continues. #USIndiasummit2020 pic.twitter.com/eRJdq8FIGF
— PMO India (@PMOIndia) September 3, 2020
Here is why the world is looking towards India. #USIndiasummit2020 pic.twitter.com/pucDu047t9
— PMO India (@PMOIndia) September 3, 2020
India offers a transparent and predictable tax regime. #USIndiasummit2020 pic.twitter.com/ztsz05828g
— PMO India (@PMOIndia) September 3, 2020
India’s goal is global good. #USIndiasummit2020 pic.twitter.com/gMpollZSj4
— PMO India (@PMOIndia) September 3, 2020
The diverse opportunities India offers. #USIndiasummit2020 pic.twitter.com/PwHZWDGrFz
— PMO India (@PMOIndia) September 3, 2020