QuoteIndia’s vibrant democracy and conducive ease of doing business environment make it an attractive investment destination: PM
QuoteIndia is playing the role of the pharmacy to the world. We’ve provided medicines to around 150 countries so far during this pandemic: PM
QuoteThe Indian story is strong today and will be stronger tomorrow: PM Modi

கனாடாவில் நடைபெற்ற இன்வெஸ்ட் இந்தியா மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று சிறப்புரை ஆற்றினர்

இந்தியாவில் உள்ள பிரமாதமான முதலீட்டு மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி மாநாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

கூட்டத்தில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது என்று கூறிய பிரதமர், முதலீட்டு முடிவுகளை எடுப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்றார்.

"நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் எதை சிந்திப்பீர்கள்? அந்த நாட்டில் துடிப்பான ஜனநாயகம் உள்ளதா? அந்த நாட்டில் அரசியல் நிலைத்தன்மை உள்ளதா? முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதற்கு நட்பான கொள்கைகள் அந்த நாட்டில் உள்ளனவா? திறன் பெற்றவர்கள் அந்த நாட்டில் உள்ளார்களா? மிகப்பெரிய சந்தை அந்த நாட்டில் உள்ளதா? இப்படி பல்வேறு கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில்: இந்தியா," என்று திரு மோடி கூறினார்.

நிறுவன முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், புதுமையான சூழலியல்களை ஆதரிப்பவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை முதலீடு செய்யவும், தொழிற்சாலைகளை உருவாக்கவும், தொழில்களை நடத்தவும்  என அனைவருக்கும் இங்கு வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

எங்களது தனியார் துறையுடனும், அரசுடனும் கூட்டமைக்க வாய்ப்புள்ளது. பணம் ஈட்டவும், கற்றுக்கொள்ளவும், வழி நடத்தவும், வளரவும் இங்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்த திரு மோடி, "கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகள் குறித்து நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள்- உற்பத்தி, விநியோக சங்கிலிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்த பிரச்சினைகள் சிக்கல்கள் இயற்கையானவை," என்றார்.

ஆனால் இந்தியா அந்தப் பிரச்சனைகளை அப்படியே விடவில்லை என்று கூறிய மோடி, நாங்கள் அவற்றை உறுதியுடன் எதிர்கொண்டு தீர்வுகளின் நிலமாக உருவாகியுள்ளோம் என்றார்.

"400 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்களூம், சுமார் 80 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயுவும் நீண்ட காலத்துக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். சரக்கு போக்குவரத்து தடைபட்ட போதிலும், 400 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள், பெண்கள், ஏழைகள் மற்றும் தேவையான மக்களின் வங்கிக் கணக்குகளில் சில தினங்களில் நேரடியாக பணத்தை செலுத்தி இருக்கிறோம்," என்று பிரதமர் கூறினார்.

கடந்த சில வருடங்களில் நாங்கள் கட்டமைத்துள்ள ஆளுகை முறைகள் மற்றும் அமைப்புகளின் வலிமையை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கு இந்தியா மருந்தகமாக செயல்படுகிறது. இந்த பெருந்தொற்றின் போது நாம் இதுவரை 150 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளோம்.  இந்த ஆண்டு மார்ச்- ஜூன் மாதங்களில் நமது விவசாய ஏற்றுமதி 23 சதவீதமாக உயர்ந்தது நம் நாடு முழு ஊரடங்கில்  இருந்தபோது இது நிகழ்ந்தது.

நமது உற்பத்திகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன, என்று திரு மோடி கூறினார்.

பெருந்தொற்றுக்கு முன் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா அவ்வளவாக உற்பத்தி செய்யவில்லை. தற்போது பல லட்சக்கணக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா உற்பத்தி செய்வதோடு, அவற்றை ஏற்றுமதி செய்தும் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

"உற்பத்தியை நாம் அதிகரித்துள்ளோம். கொவிட்-19 தடுப்பு மருந்து உற்பத்தியை பொருத்தவரை ஒட்டுமொத்த உலகத்துக்கும் உதவ நாம் விரும்புகிறோம்.

நண்பர்களே, இன்றைக்கு வலுவாக உள்ள இந்தியாவின் கதை நாளை மிகவும் வலுவானதாக இருக்கும். எப்படி என்று நான் விளக்குகிறேன். இன்றைக்கு, அயல்நாட்டு நேரடி முதலீட்டுக்கான விதிகள் எளிமையாக்கப் பட்டுள்ளன.  நட்பான வரி விதிமுறைகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம்," என்று திரு மோடி கூறினார்.

 

"துடிப்பான பத்திர சந்தையை உருவாக்க குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். முன்னணித் துறைகளுக்கு ஊக்கத்தொகை திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். மனதளவிலும், சந்தைகளிலும் பெரிய மாற்றத்தை இன்றைக்கு இந்தியா கண்டு வருகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விதிமுறைகளை எளிமையாக்கி, நிறுவன சட்டத்தின் கீழ் இருக்கும் பல்வேறு குற்றங்களை நீக்கும் பயணத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

"கொவிட்-19-ஐ எதிர்கொள்ள ஒரு புதுமையான அணுகுமுறையை இந்தியா கடைபிடிக்கிறது. ஏழைகளுக்கும், சிறு தொழில்களுக்கும் நிவாரணம் மற்றும் ஊக்கத் தொகுப்பை நாம் அளித்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய திரு மோடி, அமைப்புரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தியுள்ளோம். அதிக உற்பத்தித் திறனையும், வளத்தையும் இந்த சீர்திருத்தங்கள் உறுதி செய்யும் என்றார்.

"விமான நிலையம், ரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் வழங்குதல் ஆகிய துறைகளில் வருவாயை கூட்டுவதற்கு பெருமுயற்சி எடுத்து வருகிறோம்.

வீடு, மனை முதலீடு, உள்கட்டமைப்பு முதலீடு  ஆகியவற்றின் மூலம் வருவாயை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

 

கல்வி, தொழிலாளர் மற்றும் வேளாண்மை ஆகிய மூன்று முக்கிய துறைகளில் இந்தியா  சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இவை அனைத்தும் இணைந்து ஒவ்வொரு இந்தியரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வித்துறை சீர்திருத்தங்கள் நமது இளைஞர்களின் திறனை இன்னும் வலுப்படுத்தும் என்று திரு மோடி தெரிவித்தார்.

இந்த சீர்திருத்தங்களின் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் இந்தியாவுக்குள் வரும். தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொழிலாளர் விதிமுறைகளின் எண்ணிக்கையை பெருமளவில்  குறைக்கும் என்று பிரதமர் கூறினார்.

"முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நட்பான இந்த சீர்திருத்தங்கள் வர்த்தகம் செய்வதை மேலும் எளிதாக்கும்.தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உறுதி பூண்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

தனியாரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்களினால் அரசின் செயல்பாடு மேலும் வலுப்பெறும். இந்த சீர்திருத்தங்களின் மூலம் தொழிலதிபர்களுக்கும் கடின உழைப்பாளிகளுக்கும் வெற்றி கிட்டும். வேளாண்துறை சீர்திருத்தங்கள் தொலைநோக்கு பார்வையோடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளை அவை அளிப்பதோடு ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும். நாம் பகிர்ந்து கொண்டிருக்கும் ஜனநாயக கொள்கைகள் மற்றும் பல்வேறு பொது விஷயங்கள் இந்தியா, கனடா இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்துகின்றன என்று பிரதமர் திரு மோடி கூறினார்.

நம்முடைய பன்முக உறவுக்கு நம்மிடையே உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்புகள் முக்கியமானவையாகும். சில மிகப்பெரிய மற்றும் அதிக அனுபவம் வாய்ந்த உள்கட்டமைப்பு முதலீட்டாளர்கள் கனடாவில் இருக்கிறார்கள். முதல் முதலில் இந்தியாவில் முதலீடு செய்தவர்களில் கனடா ஓய்வூதிய நிதிகளும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், சரக்கு போக்குவரத்து, தொலைதொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் சிறந்த வாய்ப்புகளை அவர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளார்கள் என்று திரு மோடி கூறினார்.

கல்வித்துறையில் கைகோர்த்து செயல்பட இந்தியா சிறந்த இடம்.

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் முதலீடு செய்யவும் இந்தியா தான் சிறந்த நாடு. விவசாயத்துறையில் இணைந்து பணியாற்ற இந்தியா தான் உகந்த நாடு என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் கனடாவும் ஒன்று. இந்தியாவில் உங்களுக்கு எந்த தடைகளும் இருக்காது. உங்கள் நாட்டில் இருப்பதை போல இங்கு நீங்கள் உணர்வீர்கள் என்று அவர் உறுதியளித்தார்.

Click here to read PM's speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 9, 2025
March 09, 2025

Appreciation for PM Modi’s Efforts Ensuring More Opportunities for All