ஏஎன்ஐ-யுடன் இன்று நேர்காணல் நடத்திய பிரதமர் மோடி, “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதை பிஜேபி தொடரும் என்றார். “தொண்டர்களுடன் நாட்டிற்கு சேவை செய்வது நாட்டின் சாமானிய மக்களுக்கு இணையாக இருக்கும் உணர்வை எனக்குத் தருகிறது. வெற்றிகள் ஒரு சிலரின் தலைமைக்கு செல்லாதிருக்க இது முக்கியமானதாக உள்ளது” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
தற்போதைய அரசில் கொள்கைகளுக்கு எதிர்க்கட்சி உரிமைக் கோருவது பற்றிய பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி பேசினார். “எங்களின் பணிக்கு எதிர்க்கட்சி உரிமைக் கோர முயற்சி செய்வதன் பொருள், இந்தக் கொள்கை பயனுள்ளதாகவும், செயல்பாடு உடையதாகவும் இருப்பதாக நான் நம்புவதால் இந்தக் கேள்வி எப்போதும் எனக்கு மகிழ்ச்சித் தந்துள்ளது”. உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கூறிய பிரதமர் மோடி, “உத்தரப்பிரதேசத்தின் கிரிமினல்கள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கில் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் இன்று உத்தரப்பிரதேசத்தில் புதல்விகள் கூட ஒரு நாளின் எந்த நேரத்திலும் எவ்வித அச்சமுமின்றி சுற்றி வர முடியும்” என்றார்.
பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரின் உறவினர், குற்றம் இழைத்திருப்பதாக கூறப்படும் பிரச்சனைக் குறித்து கேட்டபோது, “நாட்டின் நீதித்துறை துடிப்புள்ளதாகவும், செயல்திறன் உள்ளதாகவும் இருக்கிறது. நாட்டின் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் கூறுவதற்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். சட்டப்படியாக மட்டுமே இது இருக்கும்” என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இரட்டை என்ஜின் அரசின் வெற்றிப் பற்றி பேசும் நிலையில், ‘இரட்டை என்ஜின் இல்லாத’ அரசுகளின் இத்தகைய வெற்றி இல்லாதது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “மக்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சொந்த ஆதாயங்கள் அரசியலில் முன்னுரிமை பெறும் போது அந்த மாநிலம் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பின்தங்கிவிடுகிறது” என்றார். ஜிஎஸ்டி உதாரணத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, ஏற்கனவே குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த கொள்கைகளுக்கு பதிலாக தற்போது இந்தியா முழுவதும் வரிவிதிப்பு பொதுவாக இருப்பதால் வணிகச்சூழல் சுமூகமாக உள்ளது என்று கூறினார்.
பிராந்திய விருப்பங்களைப் பாதுகாக்கும் பிரச்சனைக் குறித்து கூறிய பிரதமர் மோடி, “நாட்டின் முன்னேற்றத்திற்கு பிராந்திய விருப்பங்களை நிறைவேற்றுவதில் பாரதீய ஜனதா கட்சி நம்பிக்கைக் கொண்டுள்ளது. நீண்ட காலம் முதலமைச்சராக இருந்துள்ள நான், ஒரு மாநிலத்தின் விருப்பங்கள் மற்றும் தேவைகள் பற்றி உணர்ந்தே இருக்கிறேன். எங்கள் அரசு முன்னேற விரும்பும் மாவட்டங்களை அடையாளம் கண்டு அவற்றின் மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறது. பல அம்சங்களில் இந்த மாவட்டங்களில் சில மாநில சராசரியை ஏற்கனவே கடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் சாதி, சமய பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். “நான் முதலமைச்சராக இருந்தபோது, ஓபிசி பிரிவின் கீழ் பயனடையும் சிறுபான்மையினரை நாங்கள் அடையாளம் கண்டோம். இதனால் வரை அனைவரையும் உள்ளடக்கிய இந்த நடைமுறைப் பற்றி எவரும் பேசியதில்லை. ஆனால் தவறான தகவல்களுடன் மக்களை தவறாக வழிநடத்தி தேர்தல் ஆதாயத்திற்காக பலர் அரசியல் செய்கிறார்கள். இது இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று சிலர் அறிவிக்கும் நிலைக்கு வழிவகுக்கிறது”.
எதிர்க்கட்சியினரின் போலி சோசலிச சிந்தனை பற்றி பேசிய பிரதமர் மோடி, “வணிகம் செய்வதில் அரசுக்கு வேலை இல்லை என்று நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். அதன்படி எங்கள் அரசு நாட்டின் நலனில் கவனம் செலுத்துகிறது. போலியான சோசலிச திரையின் பின்னால் மறைந்திருக்கும் குறிப்பிட்ட ‘குடும்பத்தினரிடம்’ இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று கூறினார்.
“போலி சோஷலிசம் பற்றி நான் கூறும்போது, ‘ குடும்ப ஆதிக்கம்‘ என்றுதான் கருதுகிறேன். ராம் மனோகர் லோஹியாவின் குடும்பத்தினரை நாம் எங்காவது பார்த்திருக்கிறோமா? அவர் ஒரு சோஷலிசவாதி. ஜார்ஜ் பெர்னாண்டசின் குடும்பத்தினரை நாம் பார்த்திருக்கிறோமோ? அவரும் சோஷலிசவாதிதான். நிதிஷ்குமாரின் குடும்பத்தினரை எங்காவது பார்த்திருக்கிறோமா? அவரும் சோஷலிசவாதிதான்”என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிராந்திய விருப்பங்களை பாதுகாக்கும் பிரச்சனைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நாட்டின் முன்னேற்றத்திற்கு பிராந்திய விருப்பங்களை பூர்த்தி செய்வது அவசியம் என்பதில் பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற அடிப்படையில், ஒரு மாநிலத்தின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை நான் நன்கு அறிவேன். வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களை எங்களது அரசு அடையாளம் கண்டு, அவற்றின் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. சில மாவட்டங்கள், பல்வேறு அம்சங்களில் மாநில சராசரியை ஏற்கனவே தாண்டிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் கொள்கை வகுப்பதில் சாதி மற்றும் மத பிரச்சினையையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். “நான் முதலமைச்சராக இருந்தபோது, ஓபிசி பிரிவின் கீழ், பயனடைந்த சிறுபான்மையினரை நாங்கள் அடையாளம் கண்டோம். இது வரை வேறு யாரும் இந்த உள்ளார்ந்த நடைமுறை குறித்து பேசியதில்லை, ஆனால் தேர்தலில் வேட்பாளர் என்று வரும்போது மக்கள் அரசியல் செய்து, தவறான தகவல்களை அளித்து மக்களை திசை திருப்புகின்றனர். பின்னர், இந்த செயல், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று சில மக்களைக் கூற வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் போலி சோஷலிசவாத சிந்தனை பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “தொழில்துறையில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை’ எனவே நாட்டு நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறிவருகிறேன். போலியான சோஷலிசவாதம் என்ற பெயரில் மறைமுகமாக சில ‘குடும்பவாதம்‘ தலைதூக்குவதில்தான் பிரச்சினையே உருவெடுக்கிறது” என்று கூறினார்.
திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது, ஆனால் தேச நலன் கருதி அவை திரும்பப் பெறப்பட்டன” என்று தெரிவித்தார்.
நாட்டின் பெருந்தொற்று நிலவரம் பற்றி பேசிய பிரதமர் மோடி, “கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நான் அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன். இந்த வைரஸ் முற்றிலும் கணிக்க முடியாததாது என்பதால், நாட்டின் மீதான அதன் விளைவுகளைக் குறைக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். சில அரசியல் கட்சிகள், அச்சத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு எதிரான தேசத்தின் ஆயத்த நிலையை சீர்குலைக்க முயற்சிப்பது தான் பிரச்சினையாகிறது” என்று கூறினார்.
பஞ்சாப் தேர்தல்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நிலையற்ற தன்மையை முறியடித்து அமைதியை நிலைநாட்ட நாங்கள் எப்போதும் பாடுபட்டு வருகிறோம், எனவேதான், பஞ்சாபிலும் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம். கற்றறிந்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் எங்களுடன் கைகோர்த்து, பஞ்சாபுக்கான எங்களது தீர்வு மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பஞ்சாபுடன் எனக்கு சிறப்புமிக்க தொடர்பு உள்ளது, இந்த மாநிலத்திலேயே நான் வசித்திருக்கிறேன். மக்களுக்காக உழைத்திருக்கிறேன், பஞ்சாப் மக்களின் தூய்மையான இதயத்தை நான் அறிந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Whether there are any elections or not, BJP continues to serve the people with the mantra of 'Sabka Saath, Sabka Vikas': PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
Wherever the BJP got the opportunity to work, there the environment is of pro-incumbency instead of anti-incumbency: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
The way there used to be gunda-raj and mafia-raj in UP, the people of the state remember very well.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
There was a time goons did whatever they wanted to.
But now, the goons are surrendering. Yogi Ji has given prominence to safety and security in the state: PM @narendramodi
Bharatiya Janata Party believes in addressing regional aspirations for the nation's progress.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
Having been the Chief Minister for a long time, I'm aware of the aspirations and requirements of a state: PM @narendramodi
Our Government identified Aspirational Districts. We put special focus on them and now they are rapidly moving forward.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
Some of them have even crossed the state average on several parameters: PM @narendramodi
Government's work is to care for the poor, build houses, toilets, ensure food, drinking water for them.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
Government's work is to ensure produce of small farmers reach markets.
These are all my priority: PM @narendramodi
When I say fake socialism, I mean 'Parivarvaad'.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
Do we see Ram Manohar Lohia Ji's family anywhere? He was a socialist.
Do we see the family of George Fernandes? He was also a socialist.
So we see Nitish Kumar Ji's family anywhere? He's also a socialist: PM @narendramodi
I'm aware of the challenges small farmers face. I understand their pain.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
Farm laws were brought for benefit of the farmers.
But they have been withdrawn in the nation's interest: PM @narendramodi
Punjab wants stability and only Bharatiya Janata Party can ensure this.
— narendramodi_in (@narendramodi_in) February 9, 2022
We are the most trusted Party in the State: PM @narendramodi