இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.
இமாச்சல் ஆளுநர், முதல்வர், திரு ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலின் போது, தோத்ரா க்வார் சிம்லாவில் உள்ள பொது மருத்துவமனை மருத்துவர் ராகுலிடம் பேசிய பிரதமர், தடுப்பூசி வீணாவதை குறைத்ததற்காகவும், சிக்கலான பகுதிகளில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்காகவும், அவரது தலைமையிலான குழுவை பாராட்டினார். தடுப்பூசி திட்ட பயனாளியான மாண்டி, துனாக் பகுதியைச் சேர்ந்த திரு தயாள் சிங்கிடம் பேசிய பிரதமர், தடுப்பூசியின் வசதிகள் குறித்தும் மற்றும் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை எவ்வாறு சமாளித்தது குறித்தும் கேட்டறிந்தார்.
பிரதமரின் தலைமைக்காக, அவருக்கு பயனாளி நன்றி தெரிவித்தார். இமாச்சல் குழுவினரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். குல்லு பகுதியைச் சேர்ந்த ஆஷா பணியாளர் நிர்மா தேவியிடம், தடுப்பூசி திட்டத்தில் அவரது அனுபவம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். தடுப்பூசி நடவடிக்கைக்கு உதவியதில் உள்ளூர் மரபு பயன்பாடு குறித்தும் பிரதமர் பேசினார். இந்த குழுவினர் உருவாக்கிய உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மாதிரியை அவர் பாராட்டினார். தடுப்பூசி செலுத்த அவரது குழு நீண்ட தூரம் பயணம் சென்றது குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்த திருமதி நிர்மலா தேவியிடம், மூத்த குடிமக்களின் அனுபவம் குறித்து பிரதமர் ஆலோசித்தார். போதிய அளவிலான தடுப்பூசி விநியோகத்துக்கு, அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் இந்த பிரச்சாரத்தை ஆசிர்வதித்தனர். இமாச்சல பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்களை பிரதமர் பாராட்டினார். உனா பகுதியைச் சேர்ந்த கர்மோ தேவி என்பவர் 22,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து பணியாற்றுவதை பிரதமர் பாராட்டினார். கர்மோ தேவி போன்றோரின் முயற்சிகள் காரணமாக உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் தொடர்கிறது என பிரதமர் கூறினார்.
லாகால் மற்றும் ஸ்பிதி பகுதியைச் சேர்ந்த திரு நாவாங் உபஷக்கிடம், அவர் எவ்வாறு தனது ஆன்மீக தலைவர் பதவியை , மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயன்படுத்தினார் என்பது குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
இப்பகுதியில் அடல் சுரங்கப்பாதை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். பயண நேரம் குறைந்துள்ளதாகவும், இணைப்பை மேம்படுத்தியுள்ளதாகவும் திரு உபஷக் தெரிவித்தார். தடுப்பூசி நடவடிக்கையை விரைவாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு லகுல் ஸ்பிதியை மாற்ற உதவியதற்காக, புத்த மதத்தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில், பிரதமர் மிகவும் தனிப்பட்ட முறையிலும், இயல்பாகவும் நடந்து கொண்டார்.
கூட்டத்தினரிடம் பேசிய பிரதமர், 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இமாச்சலப்பிரதேசம், சாம்பியனாக உருவெடுத்துள்ளது என பிரதமர் கூறினார். தகுதியான அனைத்து மக்களுக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவாகியுள்ளது என அவர் கூறினார். இந்த வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் கூறினார்.
மக்களின் உணர்வு மற்றும் கடின உழைப்பு காரணமாக, இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது என அவர் கூறினார். நாள் ஒன்றுக்கு 1.25 கோடி பேருக்கு சாதனை வேகத்தில் இந்தியா தடுப்பூசி செலுத்துகிறது. இந்தியாவில் ஒரு நாளில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். தடுப்பூசி பிரச்சாரத்தில், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். சுதந்திர தினத்தின்போது ஒவ்வொருவரின் முயற்சி குறித்து பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த வெற்றி அதன் வெளிப்பாடு என கூறினார்.
தெய்வங்களின் பூமியாக இருக்கும் இமாச்சலப் பிரதேசம், இது தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் கூட்டுறவு மாதிரியை பின்பற்றுவதை அவர் பாராட்டினார்.
லகால்-ஸ்பிதி போன்ற தொலைதூர மாவட்டத்தில் கூட 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இமாச்சலப் பிரதேசம் முன்னணியில் இருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். அடல் சுரங்கப்பாதை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த பகுதி, நாட்டின் பிற பகுதியிலிருந்து பல மாதங்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது வழக்கம். தடுப்பூசி முயற்சிகளை தடுக்கும், எந்த வதந்தி மற்றும் தவறான தகவல்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததற்காக இமாச்சலப் பிரதேச மக்களை அவர் பாராட்டினார். உலகின் மாபெரும் மற்றும் வேகமான தடுப்பூசி பிரச்சாரத்தை நாட்டின் கிராம சமுதாயம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கு இமாச்சல் தான் சான்று என அவர் மேலும் தெரிவித்தார்.
வலுப்படுத்தப்பட்ட இணைப்பால் சுற்றுலாத்துறை நேரடியாக பயன் பெறுகிறது என்றும், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கும் விவசாயிகளும் பயனடைகின்றனர் என பிரதமர் கூறினார். கிராமங்களில் இணையதள இணைப்பை பயன்படுத்தி, இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் , தங்களின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவின் புதிய வாய்ப்புகள் குறித்து நாட்டுக்கும், உலகுக்கும் தெரிவிக்க முடியும் என பிரதமர் கூறினார்.
சமீபத்திய, ட்ரோன் விதிமுறைகளை பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த விதிமுறைகள் சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் பல செயல்பாடுகளில் உதவும் என்றார். இது புதிய வாய்ப்புகளுக்கான கதவை திறக்கும் என பிரதமர் கூறினார். சுதந்திர தினத்தின் மற்றொரு அறிவிப்பையும் பிரதமர் குறிப்பிட்டார். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு ஆன்லைன் தளத்தை, மத்திய அரசு உருவாக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் நமது சகோதரிகள் தங்கள் தயாரிப்புகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ஆப்பிள், ஆரஞ்சு, கின்னவ், காளான், தக்காளி போன்றவற்றை நாட்டின் எந்த பகுதியிலும் அவர்களால் விற்க முடியும்.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு, அடுத்த 25 ஆண்டுகளில், ஆர்கானிக் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என இமாச்சலப் பிரதேச விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களை பிரதமர் வலியுறுத்தினார்.
படிப்படியாக, நமது மண்ணை ரசாயணங்களில் இருந்து விடுவிக்க முடியும் என பிரதமர் கூறினார்.
100 वर्ष की सबसे बड़ी महामारी के विरुद्ध लड़ाई में हिमाचल प्रदेश, चैंपियन बनकर सामने आया है।
— PMO India (@PMOIndia) September 6, 2021
हिमाचल भारत का पहला राज्य बना है, जिसने अपनी पूरी eligible आबादी को कोरोना टीके की कम से कम एक डोज़ लगा ली है: PM @narendramodi
भारत आज एक दिन में सवा करोड़ टीके लगाकर रिकॉर्ड बना रहा है।
— PMO India (@PMOIndia) September 6, 2021
जितने टीके भारत आज एक दिन में लगा रहा है, वो कई देशों की पूरी आबादी से भी ज्यादा है।
भारत के टीकाकरण अभियान की सफलता, प्रत्येक भारतवासी के परिश्रम और पराक्रम की पराकाष्ठा का परिणाम है: PM @narendramodi
मुझे खुशी है कि लाहौल स्पीति जैसा दुर्गम जिला हिमाचल में भी शत-प्रतिशत पहली डोज़ देने में अग्रणी रहा है।
— PMO India (@PMOIndia) September 6, 2021
ये वो क्षेत्र है जो अटल टनल बनने से पहले, महीनों-महीनों तक देश के बाकी हिस्से से कटा रहता था: PM @narendramodi
हिमाचलवासियों ने किसी भी अफवाह को, किसी भी अपप्रचार को टिकने नहीं दिया।
— PMO India (@PMOIndia) September 6, 2021
हिमाचल इस बात का प्रमाण है कि देश का ग्रामीण समाज किस प्रकार दुनिया के सबसे बड़े और सबसे तेज़ टीकाकरण अभियान को सशक्त कर रहा है: PM @narendramodi
सशक्त होती कनेक्टिविटी का सीधा लाभ पर्यटन को भी मिल रहा है, फल-सब्ज़ी का उत्पादन करने वाले किसान-बागबानों को भी मिल रहा है।
— PMO India (@PMOIndia) September 6, 2021
गांव-गांव इंटरनेट पहुंचने से हिमाचल की युवा प्रतिभाएं, वहां की संस्कृति को, पर्यटन की नई संभावनाओं को देश-विदेश तक पहुंचा पा रहे हैं: PM @narendramodi
हाल में देश ने एक और फैसला लिया है, जिसे मैं विशेषतौर पर हिमाचल के लोगों को बताना चाहता हूं।
— PMO India (@PMOIndia) September 6, 2021
ये है ड्रोन टेक्नोलॉजी से जुड़े नियमों में हुआ बदलाव।
अब इसके नियम बहुत आसान बना दिए गए हैं।
इससे हिमाचल में हेल्थ से लेकर कृषि जैसे अनेक सेक्टर में नई संभावनाएं बनने वाली हैं: PM
केंद्र सरकार अब बहनों के स्वयं सहायता समूहों के लिए विशेष ऑनलाइन प्लेटफॉर्म बनाने वाली है।
— PMO India (@PMOIndia) September 6, 2021
इस माध्यम से हमारी बहनें, देश और दुनिया में अपने उत्पादों को बेच पाएंगी।
सेब, संतरा, किन्नु, मशरूम, टमाटर, ऐसे अनेक उत्पादों की हिमाचल की बहनें देश के कोने-कोने में पहुंचा पाएंगी: PM
आज़ादी के अमृतकाल में हिमाचल के किसानों और बागबानों से एक और आग्रह मैं करना चाहता हूं।
— PMO India (@PMOIndia) September 6, 2021
आने वाले 25 सालों में क्या हम हिमाचल की खेती को फिर से organic बनाने के लिए प्रयास कर सकते हैं?
धीरे-धीरे हमें chemical से अपनी मिट्टी को मुक्त करना है: PM @narendramodi