வாரணாசியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போது, சுகாதார கட்டமைப்பை அதிகரித்தது, தேவையான மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற முக்கிய சாதனங்கள் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்தது ஆகியவற்றில் , பிரதமரின் தொடர்ச்சியான மற்றும் செயல்திறன் மிக்க தலைமை உதவியதற்காக அவருக்கு வாரணாசி மருத்துவர்களும், அதிகாரிகளும் நன்றி தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி நிலவரம், வாரணாசியில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
மியூகோமிகோசிஸ் அச்சுறுத்தல் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும், இந்த நோயை சமாளிக்க ஏற்கனவே நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், கிராமங்களில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் இணைய கருத்தரங்குகளை நடத்தும்படி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பிரதமர் அறுவுறுத்தினார்.
வாரணாசியில் தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். காசியைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களின் பணியை பிரதமர் பாராட்டினார். குடும்ப உறுப்பினர்களை இழந்த அனைவருக்கும் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்தார். பனாரஸ் பகுதியில் குறுகிய காலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு படுக்கை வசதிகள் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கச் செய்ததையும், பண்டிட் ராஜன் மிஸ்ரா கொவிட் மருத்துவமனையில் அனைத்து வசதிகள் செய்யப்பட்டதையும் அவர் பாராட்டினார்.
வாரணாசியில் ஒருங்கிணைந்த கொவிட் கட்டுப்பாட்டு மையம் நன்றாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், வாரணாசியின் செயல்பாடு உலகத்துக்கு உத்வேகம் அளிப்பதாக கூறினார்.
கொவிட் தொற்றை மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்திய மருத்துவ குழுவினரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இந்த பணியில் மனநிறைவு கூடாது எனவும், பனாரஸ் மற்றும் பூர்வாஞ்சல் பகுதியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கவனம் செலுத்தி நீண்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள், கொவிட் போராட்டத்தில் அதிகம் உதவியுள்ளன என அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வசதிகள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கியது, ஜன் தன் வங்கி கணக்குகள், உடல் தகுதி இந்தியா பிரச்சாரம், யோகா மற்றும் ஆயுஷ் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பலத்தை அதிகரித்துள்ளது என பிரதமர் கூறினார்.
கொவிட் மேலாண்மையில் புதிய மந்திரத்தையும் பிரதமர் வழங்கினார்: ‘‘எங்கெல்லாம் தொற்று உள்ளதோ அங்கெல்லாம் சிகிச்சை அவசியம்’’ என அவர் தெரிவித்தார். நோயாளிகளின் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளிப்பது, சுகாதார அமைப்பின் சுமையை குறைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்கள், வீட்டுக்கு சென்று மருந்துகள் விநியோகிப்பது போன்ற முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இந்த பிரச்சாரத்தை, ஊரக பகுதிகளில் விரிவாக மேற்கொள்ளும்படி அவர் சுகாதார பணியாளர்களை கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள், பரிசோதனைக் கூடங்கள் மற்றும் இ-மார்க்கெட்டிங் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தொலைதூர மருத்துவ வசதியை ‘காசி கவச்’ என்ற பெயரில் அளிப்பது மிக புதுமையான நடவடிக்கையாக உள்ளது என அவர் கூறினார்.
கிராமங்களில் கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் மற்றும் ஏஎன்எம் சகோதரிகள் முக்கியப் பங்காற்றுவதை வலியுறுத்திய பிரதமர் அவர்களின் ஆற்றல் மற்றும் அனுபவத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்த இரண்டாவது அலையில், முன்களப் பணியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பாக சேவையாற்ற முடிகிறது. இதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதுதான் என அவர் மேலும் கூறினார். அனைவரும், அவர்களுக்கான வாய்ப்பு வரும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேச அரசின் தீவிர முயற்சிகள் காரணமாக, பூர்வாஞ்சல் பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். அதே உணர்வு மற்றும் விழிப்புடன், தற்போதும் பணியாற்ற வேண்டும் என அவர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை வலியுறுத்தினார்.
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், கருப்பு பூஞ்சை தொற்று நோய் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் எனவும் அவர் கூறினார்.
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், வாரணாசியின் மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய தலைமையையும் பிரதமர் பாராட்டினார். மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்தாலும், மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மக்கள் யாருக்காவது, எந்த குறை ஏற்பட்டாலும், அதில் கவனம் செலுத்த வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.
நகரை சுத்தமாக பராமரிப்பதில், வாரணாசி மக்கள் தங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவதையும் பிரதமர் பாராட்டினார்.
मैं काशी का एक सेवक होने के नाते हर एक काशीवासी का धन्यवाद देता हूँ।
— PMO India (@PMOIndia) May 21, 2021
विशेष रूप से हमारे डॉक्टर्स ने, नर्सेस ने, technicians, वॉर्ड बॉयज़, एम्ब्युलेन्स ड्राईवर्स, आप सभी ने जो काम किया है, वो वाकई सरहनीय है: PM @narendramodi
इस वायरस ने हमारे कई अपनों को हमसे छीना है।
— PMO India (@PMOIndia) May 21, 2021
मैं उन सभी लोगों को अपनी श्रद्धांजलि देता हूँ, उनके परिजनों के प्रति सांत्वना व्यक्त करता हूँ: PM @narendramodi
बनारस ने जिस स्पीड से इतने कम समय में ऑक्सीज़न और आईसीयू बेड्स की संख्या कई गुना बढ़ाई है, जिस तरह से इतनी जल्दी पंडित राजन मिश्र कोविड अस्पताल को सक्रिय किया है, ये भी अपने आपमें एक उदाहरण है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 21, 2021
आपके तप से, और हम सबके साझा प्रयासों से महामारी के इस हमले को आपने काफी हद तक संभाला है।
— PMO India (@PMOIndia) May 21, 2021
लेकिन अभी संतोष का समय नहीं है।
हमें अभी एक लंबी लड़ाई लड़नी है।
अभी हमें बनारस और पूर्वांचल के ग्रामीण इलाकों पर भी बहुत ध्यान देना है: PM @narendramodi
‘जहां बीमार वहीं उपचार’, इस सिद्धांत पर माइक्रो-कंटेनमेंट ज़ोन बनाकर जिस तरह आप शहर एवं गावों में घर घर दवाएँ बाँट रहे हैं, ये बहुत अच्छी पहल है।
— PMO India (@PMOIndia) May 21, 2021
इस अभियान को ग्रामीण इलाकों में जितना हो सके, उतना व्यापक करना है: PM @narendramodi
कोविड के खिलाफ गांवों में चल रही लड़ाई में आशा और ANM बहनों की भी भूमिका बहुत अहम है।
— PMO India (@PMOIndia) May 21, 2021
मैं चाहूँगा कि इनकी क्षमता और अनुभव का भी ज्यादा से ज्यादा लाभ लिया जाए: PM @narendramodi
सेकंड वेव में हमने वैक्सीन की सुरक्षा को भी देखा है।
— PMO India (@PMOIndia) May 21, 2021
वैक्सीन की सुरक्षा के चलते काफी हद तक हमारे फ्रंट लाइन वर्कर्स सुरक्षित रहकर लोगों की सेवा कर पाए हैं।
यही सुरक्षाकवच आने वाले समय में हर व्यक्ति तक पहुंचेगा।
हमें अपनी बारी आने पर वैक्सीन जरूर लगवानी है: PM @narendramodi
हमारी इस लड़ाई में अभी इन दिनों ब्लैक फंगस की एक और नई चुनौती भी सामने आई है।
— PMO India (@PMOIndia) May 21, 2021
इससे निपटने के लिए जरूरी सावधानी और व्यवस्था पर ध्यान देना जरूरी है: PM @narendramodi