மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஒரு ட்விட்டர் பதிவில், உள்துறை அமைச்சகத்தின் 'அகில இந்திய மரம் வளர்ப்பு பிரச்சாரத்தின்' கீழ், 40 மில்லியன் மரக்கன்று நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரச்சாரத்தை ஒரு முக்கியமான பங்களிப்பாக மாற்றியதற்காக அனைத்து சிஏபிஎஃப்களையும் திரு ஷா பாராட்டினார்.
திரு. ஷாவின் இந்த ட்விட்டருக்குப் பதிலளித்த பிரதமர்; "அற்புதமான சாதனை! சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் இந்த மரம் நடும் பிரச்சாரம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். " என்று கூறியுள்ளார்.
शानदार उपलब्धि! पर्यावरण और प्रकृति के संरक्षण की दिशा में गृह मंत्रालय का यह वृक्षारोपण अभियान हर किसी को प्रेरित करने वाला है। https://t.co/HLHX4g9l4e
— Narendra Modi (@narendramodi) August 19, 2023