“தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது நமது கவனம் சுகாதாரத்தில் மட்டுமின்றி அதற்கு சமமாக நல வாழ்விலும் செலுத்தப்படுகிறது”
“1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களை அமைக்கும் பணி விரைவாக முன்னேற்றமடைந்து வருகிறது. இதுவரை 85,000-க்கும் மேற்பட்ட மையங்களில் வழக்கமான சிகிச்சைகள், தடுப்பூசி மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது”
“கோவின் போன்ற இணையதளங்கள் டிஜிட்டல் சுகாதாரத் தீர்வு வழங்குவதில் உலகளவில் இந்தியாவின் நன்மதிப்பை நிலைநிறுத்தி உள்ளன”
“ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம், நுகர்வோருக்கும், சுகாதார சேவை வழங்குவோருக்கும் இடையே எளிமையான இடைமுகத்தை வழங்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் சிகிச்சை பெறுவதும், சிகிச்சை அளிப்பதும் மிகவும் எளிமையாகி உள்ளது”
“தொலை தூர சுகாதார சேவைகள் மற்றும் தொலை மருத்துவ சேவைகள், இந்தியாவின் நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையேயான சுகாதார சேவை இடைவெளியை குறைக்கும்”
“நமக்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் ஆயுஷ் மருத்துவ முறையிலான தீர்வுகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து நாம் அனைவரும் முட

மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் பங்கேற்கும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் இது ஐந்தாவதாகும். மத்திய அமைச்சர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார மேலாண்மை, தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் சுகாதாரத் துறையினருக்குப் பாராட்டு தெரிவித்ததோடு, இந்த இயக்கம் இந்தியாவின் சுகாதார சேவை முறை பற்றிய திறன் மற்றும் இயக்க ரீதியான தன்மையை நிலைநாட்டியுள்ளது என்றார்.

கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். “தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது சுகாதாரத்தில் மட்டுமின்றி, அதற்கு சமமாக நல வாழ்விலும் கவனம் செலுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

அனைவருக்குமான, முழுமையான சுகாதாரத்துறையை ஏற்படுத்தும் முயற்சிகளை வலியுறுத்திய பிரதமர், அதன் மூன்று முக்கிய அம்சங்களை விவரித்தார். முதலாவதாக, நவீன அறிவியல் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளங்களை  விரிவுபடுத்துவது. இரண்டாவதாக, ஆயுஷ் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தி, அவற்றை சுகாதார முறையில் தீவிரமாக ஈடுபடுத்துவது. மூன்றாவதாக, நவீன மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் மூலமாக, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது. ‘’ முக்கிய மருத்துவ வசதிகள், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், கிராமங்களின் அருகிலேயே கிடைக்கச் செய்வது எங்களது முயற்சியாகும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவ்வப்போது, மேம்படுத்தப்பட்டு, பரமரிக்கப்படுவது அவசியமாகும். இதற்கு, தனியார் துறைகளும், இதர துறைகளும், மேலும் ஆற்றலுடன் முன்வரவேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த, 1.5 லட்சம் சுகாதார, நலவாழ்வு மையங்களை அமைக்கும் பணி முழுவீச்சுடன் நடைபெற்று வருவதாக பிரதமர் தெரிவித்தார். இதுவரை, 85,000-க்கும் அதிகமான  மையங்கள், வழக்கமான பரிசோதனைகள், தடுப்பூசிகள், சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பட்ஜெட்டில், மனநல சுகாதார வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மருத்துவ மனிதவளத்தை மேம்படுத்துவது குறித்து பேசிய பிரதமர், ‘’ சுகாதாரச் சேவைகளின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் திறனை உருவாக்கவும் நாங்கள் முயன்று வருகிறோம். எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மருத்துவக் கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான சேவைகளுக்கு பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்லும் பணிகளை ஒரு கால வரையறையை நிர்ணயித்து, சுகாதார சமுதாயத்தினர் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தப் பணி, தரமான மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதாகவும், அனைவருக்கும் குறைந்த செலவில் அது கிடைப்பதை நோக்கமாக கொண்டும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

மருத்துவ துறையில், நவீன, வருங்கால தொழில்நுட்பங்கள் குறித்துப் பாராட்டிய பிரதமர், கோவின் போன்ற தளங்கள் உலக அளவில் இந்தியாவின் மதிப்பை, டிஜிடல் மருத்துவ தீர்வுகளுடன் உயர்த்தியுள்ளதாக கூறினார். இதேபோல, ஆயுஷ்மான் பாரத் டிஜிடல் சுகாதார இயக்கம், நுகர்வோருக்கும், சுகாதார சேவை வழங்குவோருக்கும் இடையே ஒரு சுலபமான இணைப்பை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். ‘’இத்துடன், இருதரப்புக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாட்டில் மருத்துவ சிகிச்சை மிகவும் எளிதாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தியத் தரத்துக்கு உலக அங்கீகாரம்  கிடைக்கச் செய்துள்ளதுடன், குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் வகை செய்துள்ளது’’ என்று பிரதமர் ஆயுஷ்மான் பாரத் டிஜிடல் இயக்கத்தின் பயன்களைக் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று காலத்தில் தொலை மருத்துவம் மற்றும் தொலை தூர மருத்துவ வசதியின் ஆக்கபூர்வமான பங்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையிலான சுகாதார அணுக்க பாகுபாட்டை இந்த தொழில்நுட்பங்கள் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு கிராமத்துக்கும், 5ஜி கட்டமைப்பு மற்றும் கண்ணாடி இழை கட்டமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த விஷயத்தில் தனியார் துறையினர் தங்களது பங்களிப்பை அதிகரிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மருத்துவ நோக்கங்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

ஆயுஷ் மருத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், உலக சுகாதார அமைப்பு, இந்தியப் பாரம்பரிய மருத்துவத்துக்கான ஒரே உலக மையத்தைத் தொடங்கவுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்தார். ‘’ஆயுஷ் மருத்துவத்தின் சிறந்த தீர்வுகளை, நமக்காகவும், உலகத்துக்காகவும் எவ்வாறு உருவாக்குவது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது’’ என அவர் கூறினார். 

 

 

 

 

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi