QuoteIndian institutions should give different literary awards of international stature : PM
QuoteGiving something positive to the society is not only necessary as a journalist but also as an individual : PM
QuoteKnowledge of Upanishads and contemplation of Vedas, is not only an area of spiritual attraction but also a view of science : PM

ஜெய்ப்பூரில் பத்திரிகா கேட்–ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். பத்திரிகா குழுமத் தலைவர் திரு குலாப் கோத்தாரி எழுதிய சாமவேத உபநிஷத்துகள் மற்றும் அக்ஷயத்ரா புத்தகங்களையும் பிரதமர் வெளியிட்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ராஜஸ்தானின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த வாயில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் என்று கூறினார்.

 

இரு புத்தகங்களைப் பற்றி பேசிய பிரதமர், இந்திய கலாச்சாரம் மற்றும் தத்துவத்தை அவை உண்மையாக பிரதிபலிப்பதாகவும், சமூகத்தை பயிற்றுவிப்பதில் இவற்றை எழுதியவர்கள் பெரும் பங்கு ஆற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

|

தங்களது எழுத்துகள் மூலம் ஒவ்வொரு மூத்த சுதந்திர போராட்ட வீரரும் மக்களுக்கு வழிகாட்டியதாக பிரதமர் கூறினார்.

 

இந்திய கலாச்சாரம், இந்திய பண்பாடு மற்றும் மதிப்புகளை பாதுகாக்கும் முயற்சிகளுக்காக பத்திரிகா குழுமத்தை அவர் பாராட்டினார்.

 

பத்திரிகா குழுமத்தின் நிறுவனர், திரு கற்பூர் சந்திர குலிஷ் பத்திரிகை துறைக்கு ஆற்றிய பங்களிப்பை புகழ்ந்த பிரதமர், வேதங்களின் மூலம் அறிவைப் பரப்ப அவர் முயற்சித்ததையும் நினைவு கூர்ந்தார்.

 

திரு குலிஷின் வாழ்க்கையைப் பற்றி பேசிய பிரதமர், ஒவ்வொரு பத்திரிகையாளரும் நேர்மறை எண்ணங்களோடு பணிபுரிய வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதரும் நேர்மறை எண்ணங்களோடு பணிபுரிந்து தன்னால் ஆனதை சமூகத்துக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

இரண்டு புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் காலத்தை கடந்தவை என்றும், ஒட்டுமொத்த மனித இனத்துக்குமானவை என்றும் கூறினார். உபநிஷத் சாம்வாத் மற்றும் அக்ஷார் யாத்ரா ஆகியவை அதிக அளவில் படிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

 

கூர்மையான அறிவிடம் இருந்து விலகிச் சென்று விட வேண்டாம் என்று புதிய தலைமுறையை பிரதமர் கேட்டுக்கொண்டார். உபநிஷத்துகள் மற்றும் வேதங்களைப் பற்றிய ஞானம் ஆன்மிக ஆர்வத்தை சார்ந்தது மட்டுமே அல்ல, அறிவியல் பார்வையும் தான் என்று பிரதமர் கூறினார்.

|

ஏழைகளுக்கு கழிவறை வசதி அளிக்கவும், அவர்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் தூய்மை இந்தியா இயக்கம் தேவைப்பட்டதென்று அவர் கூறினார். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை புகையில் இருந்து பாதுகாக்கும் உஜ்வால் திட்டம் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீரை வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் ஆகியவற்றைக் குறித்தும் பிரதமர் பேசினார்.

 

மக்கள் சேவைக்காகவும், கொரோனா பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியதற்காகவும் இந்திய ஊடகத்துறையை பாராட்டிய பிரதமர், கள அளவில் அரசு ஆற்றும் பணிகளைப் பற்றிய செய்திகளை மக்களுக்கு துடிப்புடன் ஊடகங்கள் வழங்கி வருவதாகவும், அவற்றில் இருக்கும் குறைபாடுகளைப் பற்றியும் செய்திகளையும் வெளியிட்டு வருவதாகவும் கூறினார்.

|

உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் 'தற்சார்பு இந்தியா' பிரச்சாரத்துக்கு ஊடகங்கள் ஆதரவளித்து வருவதற்காக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த லட்சியத்தை விரிவுபடுத்துதை குறித்தும் அவர் பேசினார். இந்தியப் பொருள்கள் சர்வதேச அளவை எட்டி வருவதாகவும், இந்தியாவின் குரலும் உலகத்தை எட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

உலகம் தற்போது இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய ஊடகத்துறையும் சர்வதேச அளவை எட்ட வேண்டும். சர்வதேச தகுதியுடைய பல்வேறு இலக்கிய விருதுகளை இந்திய நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

 

திரு கற்பூர் சந்திர குலிஷின் நினைவாக சர்வதேச பத்திரிகைத்துறை விருதை தொடங்கியதற்காக பத்திரிகா குழுமத்தை பிரதமர் பாராட்டினார்.

Click here to read full text of speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PM Modi’s Vision Is Propelling India Into Global Big League Of Defence, Space & Tech

Media Coverage

How PM Modi’s Vision Is Propelling India Into Global Big League Of Defence, Space & Tech
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 15, 2025
April 15, 2025

Citizens Appreciate Elite Force: India’s Tech Revolution Unleashed under Leadership of PM Modi