மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் குறித்து இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் ட்விட்டர் வாயிலாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்த தூதரகம், “மனதின் குரல்: வானொலியில் ஓர் சமூகப் புரட்சி” என்ற புத்தகத்திற்கு மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் திரு ஷின்சோ அபே முன்னுரை எழுதியிருந்ததையும் நினைவு கூர்ந்தது.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 89-வது அத்தியாயம் குறித்தும் தூதரக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அத்தியாயத்தில், ஆசிய நாடுகளில் ராமாயணம் மற்றும் மகாபாரத நாடகங்களை இயற்றி வரும் ஜப்பான் நாட்டு கலைஞர்கள் பற்றி பேசும்போது இந்திய- ஜப்பான் கலாச்சார உறவுகளை பிரதமர் பாராட்டியிருந்தார்.
தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில், “கனிவான வார்த்தைகளுக்கும், எனதருமை நண்பர் மறைந்த திரு ஷின்சோ அபேவை நினைவு கூர்ந்ததற்கும் மிக்க நன்றி”, என்று தெரிவித்தார்.
Thank you for the kind words and for also remembering my friend, late Mr. Shinzo Abe. #MannKiBaat https://t.co/qmf4hNvfVv
— Narendra Modi (@narendramodi) May 3, 2023