பிரதமர்கள் அருங்காட்சியகம், 5ஜி தொழில்நுட்பத்தின் அறிமுகம், அகமதாபாத் மெட்ரோ சேவை மற்றும் அம்பாஜியின் புதுப்பித்தல் குறித்த பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
பிரதமர்கள் அருங்காட்சியகம் குறித்து ஒருவர் கருத்து பதிவிட்டிருந்ததற்கு, “இச்செய்தியை அறிந்து கொள்வது, மகிழ்ச்சி அளிக்கிறது”, என்று பிரதமர் ட்விட்டர் வாயிலாக பதிலளித்தார்.
Good to know! https://t.co/9GKW4qib2S
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
அதேபோல அகமதாபாத் மெட்ரோ சேவை குறித்த பதிவிற்கு, “இதை அறிந்து கொள்வதில் உவகை அடைகிறேன். மெட்ரோ சேவை, அகமதாபாத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று திரு நரேந்திர மோடி பதிலளித்தார்.
Happy to know. The Metro will be a game changer for Ahmedabad. https://t.co/UhfVU7IDj0
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
5-ஆம் தலைமுறை தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சி முன்முயற்சிகள் குறித்த அன்னை ஒருவரின் கருத்தை பகிர்ந்திருந்தவருக்கு, “உங்கள் அன்னைக்கு என் வணக்கங்கள்! அன்பிற்கு தலை வணங்குகிறேன்”, என்று பிரதமர் பதிவிட்டார்.
My regards to your Mother! Humbled by the affection. https://t.co/ReHproT80F
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
புதுப்பிக்கப்பட்ட அம்பாஜி ஆலயம் குறித்த பதிவிற்கு, “கடந்த சில ஆண்டுகளில் அம்பாஜியில் மிகப் பெரிய பணிகள் நடைபெற்றுள்ளன. 51 சக்தி பீட ஆலயங்கள், கப்பர் தீர்த்த பணிகள் மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் உள்ளிட்டவை இதில் அடங்கும். அம்பாஜியை தரிசிக்க அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
Great work has been done in Ambaji in the last few years. This includes the Temples of the 51 Shakti Peeths, the work at Gabbar Teerth and a focus on cleanliness. I would urge more tourists and devotees to visit Ambaji. https://t.co/1JPxfK1Ga8
— Narendra Modi (@narendramodi) October 2, 2022